இந்தியா வந்தார் தென் கொரிய அதிபர்
டெல்லி:
தென் கொரிய அதிபர் ரோஹ் மூ-ஹூயுன் 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் ராணுவ அணிவகுப்புடன் மிகச் சிறப்பான வரவேற்புஅளிக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதி அப்துல் கலாமை ஹூயுன் சந்தித்துப் பேசினார்.
பிரதமர் மன்மோகன் சிங்கையும் அவர் சந்திக்கிறார். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய அவர்,இந்தியாவுடனான அரசியல் உறவு தவிர, பொருளாதார உறவையும் வலுப்படுத்திக் கொள்ள தென் கொரியா மிகத்தீவிரமாக உளளது என்றார்.
இந்தியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான வர்த்தகம் கடந்த 2002-03ம் ஆண்டில் 34 சதவீதம்அதிகரித்தது குறிப்பிடத்தக்கது. இரு நாடுகளுக்கும் இடையே 2.16 பில்லியன் டாலர் அளவுக்கு வர்த்தம் உள்ளது.இந்த ஆண்டு அது 48 சதவீதமாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் இருந்து பருத்தி, ஆடைகள், இரும்புத் தாது, இரும்பு, சமையல் எண்ணெய், ரசாயனம், கனிமங்கள்,வண்ணச் சாயங்கள், மருந்துகள், பெட்ரோலியம் ஆகியவை தென் கொரியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
அந் நாட்டில் இருந்து எலெக்ட்ரானிக் பொருட்கள், செயற்கை ரெசின்கள் உள்ளிட்டவை இந்தியாவால் இறக்குமதிசெய்யப்படுகின்றன.
இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தென் கொரியாவின் தேவூ வாகன தயாரிப்பு நிறுவனத்தை வாங்கிஇருப்பது குறிப்பிடத்தக்கது. அதே போல இந்தியாவின் எலெக்ட்ரானிக்ஸ் சந்தையை தென் கொரியநிறுவனங்களாக சாம்சங், எ.ஜி. ஆகியவையும் கார் சந்தையை ஹூயுன்டாயும் பெருமளவில் கைப்பற்றிவிட்டதுகுறிப்பிடத்தக்கது.
மேலும் கொரியாவின் சாப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்களின் எண்ணிக்கையும் மெதுவாகஉயர்ந்து வருகிறது.
ஜெர்மன் அதிபர் வருகை:
இந் நிலையில் ஜெர்மன் அதிபர் ஜெரார்ட் ஸ்ரோடரும் நாளை இந்தியா வருகிறார்.
இரு நாள் பயணமாக டெல்லி வரும் அவர், இந்தியா- ஜெர்மனி இடையே புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில்கையெழுத்திடவுள்ளார்.












Click it and Unblock the Notifications