பிள்ளையார்பட்டியும்... படத்துக்கு தடை நீக்கம்
சென்னை:
பாண்டியராஜன் நடித்துள்ள பிள்ளையார்பட்டியும், கந்துவட்டியும் படத்தை திரையிட தடை இல்லை என சென்னைஉயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிள்ளையாரையும், செட்டியார் சமூகத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் இந்தப் படத்தின் தலைப்புவைக்கப்பட்டுள்ளதாக கூறி படத்திற்குத் தடை கோரி பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவில் நிர்வாகிகள்இருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்தது. இதையடுத்துதடையை நீக்கக் கோரி படத் தயாரிப்பு நிறுவனமான லூயிஸ் பிலிம்ஸ் மேல் முறையீடு செய்தது.
கந்துவட்டிக் கொடுமையை விவரிக்கும் விதமாகவே இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. வேறு எந்த உள்நோக்கமும்இல்லை. பிள்ளையாரையோ அல்லது பிள்ளையார்பட்டியையோ இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் படத்தில்இல்லை என்று பட நிறுவனத்தினர் வாதிட்டனர்.
இதைத் தொடர்ந்து, வழக்கை விசாத்த நீதிபதி அசோக்குமாருக்கு படத்தைத் திரையிட்டுக் காட்ட ஏற்பாடுசெய்யப்பட்டது.
படத்தைப் பார்த்த நீதிபதி அசோக்குமார், ஆட்சேபனைக்குரிய காட்சிகள் படத்தில் இல்லை என்பதால் படத்தைபிள்ளையார்பட்டியும், கந்துவட்டியும் என்ற பெயரிலேயே திரையிட அனுமதி அளித்தார்.












Click it and Unblock the Notifications