மீண்டும் உயிர் பெரும் தெகல்கா விவகாரம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

தெகல்கா ஆயுத பேர ஊழலை வெளிக் கொண்டு வந்த நிருபர்கள் மீது விசாரணை நடத்த அமைக்கப்பட்ட புக்கன்கமிஷனை அதிரடியாகக் கலைத்துள்ள மத்திய அரசு, இந்த விவகாரத்தில் லட்சக்கணக்கில் லஞ்சம் வாங்கி கையும்களவுமாகப் பிடிபட்ட பா.ஜ.க. முன்னாள் தலைவர் பங்காரு லட்சுமணன், சமதா கட்சியின் தலைவர் ஜெயா ஜேட்லிஆகியோர் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தை வெளிக் கொண்டு வர தெகல்கா இணையத் தளத்தைச் சேர்ந்த நிருபர்களுக்கு உதவியமுன்னாள் உள்துறை அமைச்சக இயக்குனர் தாமஸ் மேத்யூவின் சஸ்பெண்ட் உத்தரவையும் மத்திய அரசு ரத்துசெய்துள்ளது.

தெகல்கா நிருபர்கள் தங்களை ஆயுத ஏஜெண்டுகள் என்று கூறிக் கொண்டு, பாதுகாப்பு அமைச்சகத்தின் உயர்அதிகாரிகள், பங்காரு லட்சுமணன், ஜெயா ஜேட்லிக்கு ஆகியோருக்கு லட்சக்கணக்கில் பணம் தந்து அதைரகசியமாக வீடியோ படம் பிடித்தனர்.

இதன்மூலம் பாதுகாப்பு அமைச்சகத்தில் பல ஆவணங்களையும் தெகல்கா குழுவினரால் பெற முடிந்தது.அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டசின் கட்சியான சமதா கட்சியின் தலைவரான ஜெயாஜேட்லியும் தெகல்கா குழுவினரை சந்தித்தார். அப்போது பாதுகாப்புத்துறை சம்பந்தமாக பேரம் பேசினார்.

இதையடுத்து இந்த விவகாரத்தில் தொடர்புடைய பங்காரு, ஜெயா ஜேட்லி, பாதுகாப்பு அதிகாரிகள் மீதுநடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, இந்த விஷயத்தை படம் பிடித்துக் காட்டி தெகல்கா நிருபர்கள் மீது பா.ஜ.க.நடவடிக்கை எடுத்தது.

நிருபர்கள் விதிகளை மீறி நடந்து கொண்டது குறித்து விசாரிக்க கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தக் கமிஷனைகாங்கிரஸ் அரசு இப்போது கலைத்துள்ளது.

மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து பங்காரு, ஜெயா,பாதுகாப்பு அதிகாரிகளிடம் சிபிஐ விசாரணை நடத்தவுள்ளது.

நில பேர ஊழல் விசாரணை:

இதற்கிடையே 1999ம் ஆண்டு முதல் பா.ஜ.கவுக்கு நெருக்கமான பல அமைப்புகள், சங் பரிவார் அமைப்புகளுக்குநிலங்கள் ஒதுக்கப்பட்டது குறித்தும் விசாரணை நடத்த யோகேஷ் சந்திரா தலைமையில் ஒரு கமிட்டியை மத்தியஅரசு அமைத்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 27,000 கோடி மதிப்புள்ள நிலங்கள் சங் பரிவார் அமைப்புகளுக்கு மத்திய அரசுஒதுக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. மார்க்கெட் விலைக்கும் குறைவாக அடி மாட்டு விலைக்கு இவைதரப்பட்டுள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.

குறிப்பாக டெல்லியின் மிக விலையுயர்ந்த பகுதிகளில் இந்த நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+