சந்திரிகாவின் யோசனை: புலிகள் நிராகரிப்பு
ஜெனீவா:
இலங்கையில் அமைதி ஏற்படுத்த தேசிய ஆலோசனை கவுன்சில் அமைக்கலாம் என்ற அதிபர் சந்திரிகாகுமாரதுங்காவின் யோசனையை விடுதலைப் புலிகள் நிராகரித்துள்ளனர்.
புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான குழுவினர் ஜெனீவாவில் நேற்றுஐந்தாவது நாளாக இலங்கை அரசியல் விவகாரங்கள் குறித்து பல்வேறு தரப்பினருடனும் ஆலோசனைகள்நடத்தினர்.
இந்தக் குழுவினரை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கப் பிரதிநிதிகள் சந்தித்து வட கிழக்குப் பிராந்தியத்தில் நிலவும்சூழல் குறித்து விவாதித்தனர். மேலும் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் பலரும் புலிகளின் குழுவினரைசந்தித்துப் பேசினர்.
இது தவிர புலிகளின் அரசியல் சட்டக் குழுவினரும் கடந்த 5 நாட்களாக ஜெனீவாவில் முக்கிய விவாதம் நடத்திவருகின்றனர்.
புலிகளின் குழுவினரை நார்வே வெளியுறவுத் துறை இணை அமைச்சர் விடார் ஹெல்ஜெசனும் சந்தித்துப்பேசினார்.
இதையடுத்து நார்வே தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்யிைல் அரசியல் படுகொலைகளை உடனே நிறுத்திக் கொள்ளுமாறு விடுதலைப் புலிகளை ஹெல்ஜெசன்கேட்டுக் கொண்டார். மேலும் 2002ம் ஆண்டில் செய்யப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மீறப்படுவது குறித்தநார்வேயின் கவலையையும் தெரிவித்தார் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கையில் அமைதி ஏற்படுத்த தேசிய ஆலோசனை கவுன்சில் அமைக்கலாம் என்ற அதிபர்சந்திரிகா குமாரதுங்காவின் யோசனையை புலிகள் நிராகரித்துள்ளனர். இது காலத்தை வீணடிக்கும் செயல் எனதமிழ்ச்செல்வன் கருத்து தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications