நெல்லையில் முஸ்லீம் அமைப்புகளிடையே மோதல்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி:

தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் தமிழக தாவீத் ஜமாத் அமைப்பு ஆகியவற்றுக்கிடையே மோதல்முற்றியுள்ளது. இவர்களது மோதலால் நெல்லையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

கடந்த 1995ம் ஆண்டு பி.ஜெய்னுல்லாப்தீன் என்பவரால் தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது.சிறந்த பேச்சுத் திறமை கொண்ட ஜெய்னுல்லாப்தீன் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து முஸ்லீம்மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்தார்.

தமிழகம் முழுவதும் அவர் தீவிரப் பிரசாரம் செய்து பாபர் மசூதி இடிப்பு குறித்து விளக்கினார். அவரது பேச்சுக்குமுஸ்லீம் மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஆனால் போகப் போக ஜிஹாத் (புனிதப் போர்) குறித்து ஜெய்னுல்லாப்தீன் அடிக்கடி வலியுறுத்தவே அதற்குகட்சியின் ஒரு பிரிவினடையே அதிருப்தி ஏற்பட்டது. குறிப்பாக மிதவாத கொள்கையுடன் இருந்த கட்சியினர்ஜெய்னுல்லாப்தீன் இளைஞர்களை தவறான பாதைக்குத் திருப்புவதாக எண்ணினர்.

இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு மார்ச் 21ம் தேதி தஞ்சாவூரில் நடந்த தமுமுக மாநாடு மற்றும் பேரணியின்போதுஜெய்னுல்லாப்தீன் ஒதுக்கப்பட்டார். மாநாட்டில் பேச அவருக்கு கட்சி நிர்வாகிகள் அனுமதி தரவில்லை. கட்சித்தலைவராக உள்ள ஜவாஹிருல்லா முதன்மைப்படுத்தப்பட்டார்.

இதனால் கோபமடைந்த ஜெய்னுல்லாப்தீன், தமுமுகவில் தனக்கு விசுவாசமாக உள்ளவர்களை சேர்த்துக் கொண்டுதமிழ்நாடு தாவீத் ஜமாத் என்ற புதிய அமைப்பை தொடங்கியுள்ளார். இந்த அமைப்பு, தமுமுகவுடன் ஆங்காங்கேமோதலில் ஈடுபட்டு வருகிறது.

இந்த மோதல் தற்போது நெல்லையில் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அக்டோபர் 10ம் தேதி தமுமுகவின் மாநாடுநெல்லையில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் தமுமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில், தமுமுக மாவட்டத் தலைவர் முகம்மது ரபி என்பவரது தலைமையில் பாளையங்கோட்டை பகுதியில்சுவர் விளம்பரம் எழுதப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சிலர் ரபி மற்றும் சுவரில் எழுதிக்கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் விளம்பரம் எழுதிக் கொண்டிருந்த கோமதி நாயகம், சுந்தர் ஆகியோருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. ரபிஅதிர்ஷ்டவசமாக காயமின்றித் தப்பினார். ஜெய்னுல்லாப்தீன் தலைமையிலான அமைப்புதான் இதற்குக் காரணம்என ரபி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் கொடுத்துள்ள போலீஸ் புகாரில், மாவட்ட தாவீத் ஜமாத் தலைவர் சையத் அலி எனப்படும்கோட்டூர் ரபீக் மற்றும் 10 பேர் மீது குற்றம் சாட்டியுள்ளார். இதையடுத்து இவர்களை கைது செய்யும் முயற்சியில்போலீஸார் இறங்கியுள்ளனர்.

பதற்றம் நிறைந்த பகுதிகளில் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தமுமுகவினருக்கு பாதுகாப்புஅதிகரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+