தனியார் துறையில் இட ஒதுக்கீடு: மன்மோகன் உறுதி

Subscribe to Oneindia Tamil

மும்பை:

தனியார் துறையில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வருவதை யாராலும்தடுக்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

மகாராஷ்டிராவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருக்கும் மன்மோகன் சிங், மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:

இட ஒதுக்கீடு செய்ய தனியார் துறையினர் தன்னார்வத்துடன் முன்வர வேண்டும். தனியார் துறையில் இடஒதுக்கீடுசெய்வதற்கான நேரம் வந்துவிட்டது. இதை யாராலும் தடுக்க முடியாது. ஏனெனில் இது தேசியக் கொள்கையாகஉருவெடுக்கப் போகிறது.

இது தொடர்பான அமைச்சரவைக் குழுவுக்கு தலைமை வகிக்கும் மத்திய வேளாண்துறை அமைச்சர் சரத் பவாரிடம்,இது குறித்து தனியார் துறையினருடன் பேச்சு நடத்துமாறு கேட்டிருக்கிறேன் என்றார் மன்மோகன் சிங்.

பின்னர் மும்பை தொழிலதிபர்கள், தன்னார்வ நிறுவனங்களின் பிரதிநிதிகள் கூட்டத்தில் பேசும்போதும் அவர் இதைவலியுறுத்தினார். தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின்செயல்திட்டத்தில் இடம் பெற்றுள்ளதை அவர் குறிப்பிட்டார்.

முன்னதாக காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் அவர் பேசுகையில்,

கடந்த மக்களவைத் தேர்தலில் அடைந்த தோல்வியை வகுப்புவாத சக்திகளால் இன்னும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. நாடாளுமன்றம் சுமுகமாகச் செயல்படுவதைத் தடுக்கும் இவர்கள், இப்போது அரசைவீழ்த்துவதற்காக ஜோதிடர்களையும், தந்திரீகர்களையும் நாடி ஓடிக் கொண்டிருக்கின்றன.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு செப்டம்பர் 26-க்கு முன்பே கவிழ்ந்து விடும் என்று எதிர்க்கட்சிகள் வதந்திபரப்புகின்றன. இந்த அரசு 5 ஆண்டுகள் முழுவதும் ஆட்சியில் இருக்கும்.

மத்தியில் இரண்டு அதிகார மையங்கள் எதுவும் இல்லை. நான்தான் பிரதமர். சோனியா காந்தி எங்கள் வலிமையின்ஆதார சக்தியாக விளங்குகிறார்.

தெஹல்கா ஆயுத பேர ஊழலை விசாரிக்க அமைக்கப்பட்ட புக்கன் கமிஷனை கலைத்தது சரியானநடவடிக்கைதான். கடந்த மூன்றாண்டுக் காலத்தில் அந்த கமிஷனால் எந்த அறிக்கையையும் தயாரிக்கமுடியவில்லை என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+