ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை சர்வதேச விருது
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருது வழங்கி கெளரவிக்க உள்ளது சர்வதேச மனித உரிமைகள்பாதுகாப்புக் குழு என்ற அமைப்பு.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
உக்ரைன் நாட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் ஐநா சபையின் அதிகாரப்பூர்வ ஆலோசனைஅமைப்பான சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்புக் குழு, ஜெயலலிதாவுக்கு தங்கத் தாரகை விருதினை வழங்கிகெளரவிக்கவுள்ளது.
தமிழ்நாட்டில் பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினரின் முன்னேற்றத்திற்காக ஜெயலலிதா ஆற்றிய பணிகளைப்பாராட்டி இந்த விருது அளிக்கப்படுகிறது.
தாயின் பெயரின் முதலெழுத்தை குழந்தைகள் தங்களது இனிஷியலாக வைத்துக்கொள்ள ஆணை,இந்தியாவிலேயே முதன் முறையாக அனைத்து மகளிர் காவல் நிலையம் தொடக்கம், இந்தியாவிலேயேமுதன்முறையாக பெண் போலீஸ் கமாண்டோ படை, துணிச்சலான காரியம் புரிந்த பெண்களுக்கு கல்பனா சாவ்லாபெயரில் விருது,
பெண் சிசுவதையைத் தடுக்கும் தொட்டில் குழந்தைத் திட்டம், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர்,பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள்,
வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் திருமணமான ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்புமற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தது ஆகிய செயல்களுக்காக இந்த விருது தரப்படுகிறது.
வரும் 11ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும்விழாவில் ஜெயலலிதாவுக்கு இந்த விருது வழங்கப்படும்.
இந்த விருது, இதற்கு முன் ஐநா சபை பொதுச் செயலாளர் கோபி அன்னான், ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடீன்,ஐஸ்லாண்ட் பிரதமர் டேவிட் ஆட்ஸன் போன்றோரும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications