பொடா மறு ஆய்வு குழு: நீதிபதி சஹாரியா ராஜினாமா
டெல்லி:
பொடா மறு ஆய்வுக் குழு தலைவர் பதவியை நீதிபதி சஹாரியா திடீரென ராஜினாமா செய்தார்.
பொடா சட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில் அச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளைஓராண்டுக்குள் மறு ஆய்வு செய்து முடிக்கும்படி நீதிபதி சஹாரியா தலைமையிலான குழுவை மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
இந் நிலையில் நீதிபதி சஹாரியா தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தைகுடியரசுத் தலைவர் அப்துல் கலாமிடம் சமர்ப்பித்துள்ளார். அக் கடிதத்தில், சொந்த காரணங்களுக்காகப் பதவியைராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சஹாரியாவின் ராஜினாவினால் ஏற்பட்டுள்ள நிலைமை குறித்து ஆராய, மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல் அவசர கூட்டத்தைக் கூட்டி விவாதித்தார்.
3 பேர் கொண்ட பொடா மறு ஆய்வுக் குழுவில் இப்போது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ரஹ்மான் மற்றும்ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி அரவிந்த் எம். இனாம்தார் ஆகியோர் உள்ளனர்.
சென்னையில் சஹாரியா:
தனது பதவியை ராஜினாமா செய்த கையோடு சொந்த வேலை விஷயமாக சென்னை வந்த சஹாரியா மானநிலையத்தில் நிருபர்களிடம் பேசுகையில்,
பொடா மறு ஆய்வுக் குழு தலைவராக நான் ஆற்றிய பணிகள் குறித்து எனக்கு முழு திருப்தியே. இந்த மாதம் 23ம்தேதிக்குள் பொடா வழக்குகள் அனைத்தையும் விசாரித்து முடித்துவிடலாம் என்று நினைத்தேன்.
ஆனால், கமிட்டியின் செயல் காலத்தை மேலும் ஓராண்டுக்கு மத்திய அரசு நீட்டித்துவிட்டது. அவ்வளவு நாட்கள்இப் பதவியில் நீடிக்க எனது சொந்தப் பணிகள் இடம் தரவில்லை. இதனால் விலகுகிறேன்.
எனது முடிவுக்கு அரசியல் நெருக்கடிகள் எதுவும் காரணமில்லை. சொந்த வேலைகள் தான் காரணம் என்றார்.
வைகோ உள்ளிட்ட மதிமுகவினர் 9 பேர் மீது போடப்பட்ட பொடா வழக்குகள் செல்லாது என அதிரடி தீர்ப்புவழங்கியவர் நீதிபதி சஹாரியா என்பது குறிப்பிடத்தக்கது.
-
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications