ரஷ்ய நிறுவன வழக்கு விசாரணை முடிந்தது: விரைவில் தீர்ப்பு
சென்னை:
கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்திற்கான டெண்டரை வழங்க மூத்த அமைச்சரின் பிரதிநிதிகள் லஞ்சம் கேட்டதுதொடர்பாக ரஷ்ய நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணை முடிந்துவிட்டது. இந்த வழக்கில்தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னையின் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க ரூ.17,000 கோடி செலவில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைஅமல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டிருந்தது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற இரு முன்னணி நிறுவனங்கள்போட்டியிட்டன.
அதில் ரஷ்யாவைச் சேர்ந்த குருனிசேவ் ஸ்டேட் புரொடக்ஷன்ஸ் ஸ்பேஸ் சென்டர் என்ற நிறுவனத்தின் துணைநிறுவனமான பர்ஸ்ட் பிளான்ட் என்ற நிறுவனமும் ஒன்று. இந்த நிறுவனத்துக்கு டெண்டரைப் பெற்றுத் தரசென்னையில் உள்ள ரஷ்ய துணைத் தூதரகமும் முயன்றது.
ஏற்கனவே கடல்நீரை குடிநீராக்கும் உயர் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக செயல்படுத்திய நிறுவனம் இதுஎன்பதை தமிழக அரசுக்கு சுட்டிக் காட்டிய ரஷ்ய தூதரகம், இந்தத் திட்டத்தை அமாக்கும் பொறுப்பை அந்தநிறுவனத்துக்கு வழங்குமாறு தமிழக அரசுக்கு பரிந்துரையும் செய்தது.
இந் நிலையில் ரஷ்ய நிறுவனத்தின் டெண்டரை தமிழக அரசு நிராகரித்துவிட்டு மீண்டும் சர்வதேச டெண்டர்கோரியது.
இதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக ரஷ்ய நிறுவனம் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.
அதில், தங்களுக்கு டெண்டர் வழஙக தமிழக மூத்த அமைச்சர் ஒருவர் ரூ. 50 கோடி லஞ்சம் கேட்டதாகவும், அதைக்கொடுக்க மறுத்ததால் தான் டெண்டரை தங்களுக்கு ஒதுக்க தமிழக அரசு மறுப்பதாகவும் புகார் கூறப்பட்டது.
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசின் மறு டெண்டரை ரத்து செய்தது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு மேல் முறையீடு செய்தது. இந் நிலையில் இதே விவகாரம் தொடர்பாக திமுகவழக்கறிஞர் முத்துராமலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் தமிழகஅமைச்சர் லஞ்சம் கேட்டதால், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்குகளை நீதிபதி தினகர், நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா ஆகியோர் விசாரித்து வந்தனர். விசாரணையின்போது, அமைச்சர் லஞ்சம் கேட்டது குறித்து உரிய ஆதாரத்துடன் கடந்த வருடம் செம்டம்பர் 12ம் தேதி முதல்வர்ஜெயலலிதாவிடம் புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய நிறுவனம் தெரிவித்தது.
ஆனால், இதை தமிழக அரசு வழக்கறிஞர் மறுத்தார். அந்த நாளில் ஜெயலலிதா சென்னையில் இல்லை; ஊட்டியில்இருந்தார் என்று வாதிட்டார்.
நேற்று இந்த வழக்குகள் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது பேசிய நீதிபதி தினகர், இந்த விவகாரத்தில்நேரடியாக சிபிஐ விசாரணையை எப்படிக் கோர முடியும்? இது தொடர்பாக மாநில லஞ்ச ஒழிப்புத் துறையை நாடவேண்டியது தானே என்று கேட்டார்.
இதையடுத்து சிபிஐ விசாரணை கோரும் வழக்கை வாபஸ் பெறுவதாக முத்துராமலிங்கம் அறிவித்தார்.
இதைத் தொடர்ந்து ரஷ்ய நிறுவனம் தாக்கல் செய்துள்ள வழக்கின் மீதான தீர்ப்பை பின்னர் வழங்குவதாகநீதிபதிகள் அறிவித்தனர்.
இத் திட்டத்தை ரஷ்ய நிறுவனத்துக்கு வழங்க, ரஷ்ய தூதரகத்துக்கே வந்த அமைச்சரின் பிரதிநிதிகள் லஞ்ச பேரம்நடத்தியதாகவும், அதை தூதரகத்தின் ரகசிய கேமராக்கள் படம் பிடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications