வைகோ: பொடா நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
வைகோ மீதான பொடா வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில்தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தன் மீதான பொடா வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி மறுத்ததை எதிர்த்துமதிமுக பொதுச் செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், வைகோ மற்றும் 8 மதிமுகவினர் மீது விசாரணை நடத்த பூந்தமல்லி பொடாநீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.
வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்குக்கு முகாந்திரமில்லை என்று தீர்ப்பளித்த பொடா மறு ஆய்வுக்குழு, அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.இதையடுத்து வைகோ மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக பொடா நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
ஆனால், வாபஸ் பெறுவதற்கு முறையான காரணங்களை தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை என்று கூறியபொடா நீதிமன்ற நீதிபதி, வழக்கை வாபஸ் பெற அனுமதி தர மறுத்துவிட்டார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் வைகோ. இந்த வழக்கு இன்று நீதிபதி வரியவா,நீதிபதி சேமா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ மீதான வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த பொடா நீதிமன்றத்துக்கு இடைக்காலத்தடை விதித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உரிய பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும்உத்தரவிட்டனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications