சிவரஞ்சனியை ஏற்க மறுக்கும் போலீஸ்காரரின் தாய்

Subscribe to Oneindia Tamil

மதுரை:

சிவரஞ்சனி என்ற சத்யாவை என் மகன் திருமணம் செய்து கொண்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று போலீஸ்காரர்மணிகண்டனின் தாய் மிரட்டல் விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே உள்ள லட்சுமாங்குடி என்ற கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்ற சிவரஞ்சனி, தன்னைக் காதலித்தமணிகண்டன் பலமுறை உடலுறவு வைத்துவிட்டு ஏமாற்றி விட்டதாகவும், காவல்துறையினர் தன்னை மற்றொரு ஜெயலட்சுமியாக சித்தரிக்கமுயல்வதாகவும் கூறி மதுரை ஆயுதப்படை பட்டாலியன் அலுவலகம் முன் உண்ணாவிரதம் இருந்தார்.

இதனையடுத்து குற்றம் சாட்டப்பட்ட போலீஸ்காரர் மணிகண்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த புகார் குறித்து போலீஸார் தீவிரமாகவிசாரித்து வருகின்றனர்.

இந் நிலையில், மணிகண்டனின் தாய் காந்தா நிருபர்களிடம் பேசுகையில்,

சிவரஞ்சனியைப் பற்றி அவளுடைய ஊரில் நாங்கள் விசாரித்தோம். சிவரஞ்சனி, சத்யா, கவிதா, அஞ்சலி, அமுதா என்று பலரிடமும்ஒவ்வொரு பெயரைச் சொல்லி அந்த பெண் பல பேரைக் காதலித்து இருக்கிறாள். என் பையன் 11வது ஆள்.

அந்த பெண் நல்ல குடும்பத்துப் பெண்ணாக இருந்தால், கட்டாயம் என் பையனுக்கு கல்யாணம் செய்து வைத்திருப்பேன். என் அப்பாமலேசியாவில் இருக்கார், என் அம்மா பெரிய பணக்காரி, என்கிட்டே 50 பவுன் நகை இருக்கு என்று சொன்னாள்.

விசாரித்த பின்புதான் தெரிந்தது எல்லாமே பொய் என்று. அவளை என் பையன் கட்டிக்கிட்டா நான் தற்கொலை செய்து கொள்வேன்என்றார்.

ஆனால், தனது மகன் மணிகண்டன் சிவரஞ்சனியை அத்தை வீட்டில் தங்க வைத்து பலமுறை உடலுறவு கொண்டது குறித்துக் கேட்டபோதுமட்டும் பதில் சொல்லாமல் நழுவினார்.

இந் நிலையில் கைதாகி சிறையில் இருக்கும் மணிகண்டன் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மீது வரும் 12ம் தேதி விசாரணை நடக்கவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+