பெங்களூர் தியேட்டரை நொறுக்கிய கன்னட வெறியர்கள்
பெங்களூர்:
இந்திப் படம் திரையிட்ட பெங்களூர் திரையரங்கை கன்னட அமைப்பைச் சேர்ந்தவர்கள் அடித்து நொறுக்கினர்.இதைப் படம் எடுத்த பத்திரிக்கைப் புகைப்படக்காரர்களும் தாக்கப்பட்டனர்.
கர்நாடகத்தில் கன்னடம் அல்லாத பிற மொழிப் படங்களை 7 வாரம் கழித்தே வெளியிட வேண்டும் என்று கன்னடதிரையுலகம் தடை விதித்துள்ளது. இதற்கு கர்நாடகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திரையரங்குகள்காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தன.
மேலும் கன்னடத் திரையுலகுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், கன்னட திரையுலகுக்கு ஒத்துழைப்பு தரமாட்டோம், கன்னட நடிகர், நடிகைகளை தெலுங்குப் படங்களில் நடிக்க வைக்க மாட்டோம் என்று ஆந்திரதிரைப்பட வர்த்தக சபை அதிரடியாக அறிவித்தது.
ஆந்திர திரையுலக முடிவை பின்பற்றப் போவதாக தமிழ்த் திரையுலகினரும் அறிவித்தனர். ஆனால் வழக்கம்போலமுதுகெலும்பு இல்லாத தங்களது நிலையைக் காட்டியுள்ளனர். இதுவரை கன்னடத் திரையுலகுக்கு எதிரான ஒருநடவடிக்கையையும் தமிழ் திரையுலகம் எடுக்கவில்லை.
இந்தச் சூழ்நிலையில், பெங்களூரில் புதிய இந்தி படத்தைத் திரையிட்ட திரையரங்கம் ஒன்று அடித்துநொறுக்கப்பட்டது. படம் பார்த்த ரசிகர்களும் தாக்கப்பட்டனர்.
பெங்களூர் மாரத்தஹள்ளி பகுதியில் உள்ள திரையரங்கு வளாகத்தில் தூம் என்ற இந்திப் படம், பிரைட் அன்ட்பிரிஜுடிஸ் என்ற படம் வெள்ளிக்கிழமை திரையிடப்பட்டன. இதை அறிந்த கன்னட திரைப்பட தயாரிப்பாளர்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அங்கு விரைந்து வந்தனர்.
படத்தை நிறுத்துமாறு அவர்கள் உத்தரவிட்டனர். அவர்களின் உத்தரவை ஏற்ற திரையரங்க நிர்வாகம் படத்தைத்திரையிடுவதை நிறுத்தியது. மீண்டும் படத்தைத் திரையிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றுதிரையரங்க நிர்வாகிகளை தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் எச்சரித்து விட்டுச் சென்றனர்.
இந் நிலையில் சனிக்கிழமை மீண்டும் இந்தப் படங்களை திரையிட்டது திரையரங்க நிர்வாகம். இதை அறிந்ததும்கன்னட பாதுகாப்பு அமைப்பு என்ற பெயரிலான அமைப்பைச் சேர்ந்த சிலர் கும்பலாக திரையரங்குக்கு வந்தனர்.
திரையரங்க கண்ணாடிகளை உடைத்தனர். கதவுகளை கட்டைகளால் அடித்து தாக்கினர். கண்ணில் பட்டபொருட்களை உடைத்துத் தள்ளினர். படம் பார்க்க வந்தவர்களையும் சரமாரியாக தாக்கி விரட்டினர்.
கொலை வெறித் தாக்குதலில் ஈடுபட்டிருந்த அவர்களது கவனம் பத்திரிக்கை புகைப்படக்காரர்கள்,தொலைக்காட்சிகளின் வீடியோ புகைப்படக்காரர்கள் மீது திரும்பியது. அவர்களைத் தாக்கிய கன்னட வெறியர்கள்,கேமராக்களைப் பிடுங்கி அவற்றை உடைத்து நொறுக்கினர்.
வெறி தணிந்த நிலையில் அந்த கும்பல் அங்கிருந்து சென்றது. இதுகுறித்து போஸீலில் திரையங்க உரிமையாளர்அனுராதா புகார் கொடுத்துள்ளார். தாக்குதலில் அவரும் காயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications