விஜயகாந்த் மீதான புகார்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
விஜயகாந்த் மீதான வழக்கில் கோவை மாவட்டம் கோமங்கலம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.
கோவை மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள சடையபாளையம் பகுதியைச் சேர்ந்த பரணீதரன் என்பவர்சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்துள்ளார்.
அதில், தனது குடும்பத்தினரின் அனுமதி பெறாமல் சடையபாளையத்தில் உள்ள தனது பண்ணை வீட்டுக்குள்விஜயகாந்த் தலைமையில் நெறஞ்ச மனசு படப்பிடிப்புக் குழுவினர் புகுந்து ஷூட்டிங் நடத்துகிறோம் என்றபெயரில் பண்ணையை நாசப்படுத்தி விட்டதாகவும், மோட்டார் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுவிட்டதாகவும் புகார் கூறியிருந்தார்.
இதுதொடர்பாக கோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தால், அதை ஏற்றுக் கொள்ள இன்ஸ்பெக்டரும்,சப் இன்ஸ்பெக்டரும் மறுத்து விட்டனர். எனவே வழக்கைப் பதிவு செய்யுமாறு கோமங்கலம் காவல் நிலையத்திற்குஉத்தரவிட வேண்டும் என்று பரணீதரன் தனது மனுவில் கோரியிருந்தார்.
மனுவை விசாரித்த நீதிபதி சொக்கலிங்கம், கோமங்கலம் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறுஉத்தரவிட்டார். இதன்படி, கோமங்கலம் இன்ஸ்பெக்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அவரிடம், பரணீதரன் புகார் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து விரிவான அறிக்கைதாக்கல் செய்யுமாறு நீதிபதி சொக்கலிங்கம் உத்தரவிட்டார். பின்னர் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
-
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்












Click it and Unblock the Notifications