ஜெயலலிதாவுக்கு இன்று தங்கத் தாரகை விருது
சென்னை:
ஐநாவின் ஆலோசனை அமைப்பான சர்வதேச மனித உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் தங்கத் தாரகை விருது முதல்வர் ஜெயலலிதாவுக்கு இன்று வழங்கப்படுகிறது.
சென்னைக்குக் கிருஷ்ணா நீரைக் கேட்டுப் பெறுவதற்காக கடந்த மாதம் 30-ம் தேதி ஜெயலலிதா தனது தோழிசசிகலாவுடன் ஹைதராபாத் சென்றார். ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியைச் சந்தித்துப் பேசிய பின்,ஹைதராபாத்தில் தனக்குச் சொந்தமான திராட்சை தோட்டத்தில் 10 நாட்கள் ஓய்வெடுத்தார்.
ஓய்விற்குப் பின் ஜெயலலிதா நேற்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்பினார். அவர் இன்று மாலைசென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெறும் விழாவில் தங்கத் தாரகை விருதுபெறுகிறார்.
தொட்டில் குழந்தைகள் திட்டம், பெண் குழந்தைகள் கல்வி பயில்வதற்கான திட்டம், மகளிர் சுய உதவிக் குழுக்கள்,ஆதிதிராவிட, பழங்குடியினர் மற்றும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த பெண்களுக்கு கல்விச்சாலைகளுக்குசெல்வதற்காக இலவச சைக்கிள்கள்;
அனைத்து மகளிர் காவல் நிலையங்கள், பெண் கமாண்டோக்கள் உள்ளிட்ட மகளிர் நலம் சார்ந்த பல்வேறுதிட்டங்களை அமல்படுத்தியமைக்காக உக்ரைனில் உள்ள ஐநா சபையின் ஆலோசனை அமைப்பான சர்வதேசமனித உரிமை பாதுகாப்புக் குழு இவ்விருதை வழங்குகிறது.
இவ் விழாவில் பங்கேற்பதற்காக அக் குழுவின் தலைவி நதாலியா கிறிவுத்சா, தலைவர் பியோதர் வாசிலெனிகோ,இயக்குநர் ஆல்பர்ட் கிட்சர் ஆகியோர் விமானம் மூலம் சென்னை வந்தனர்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வருக்கு இவ்விருது வழங்குவது குறித்துமகிழ்ச்சியடைவதாக அவர்கள் தெரிவித்தனர்.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications