நான் ஜெவின் கைக்கூலி: எஸ்.வி.சேகர் பெருமிதம்
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் கைக்கூலியாக இருப்பதில் பெருமையடைகிறேன் என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.
விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் திருமாவளவனை விமர்சித்து அதிமுகவைச் சேர்ந்த நடிகர்எஸ்.வி.சேகர் சமீபத்தில் வேலூரில் நடந்த ஒரு கூட்டத்தில் பேசினார்.
இதற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்த விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பினர் எஸ்.வி.சேகரின் வீட்டைமுற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து எஸ்.வி.சேகர் வீடு உள்ள மந்தைவெளி 5வது குறுக்குத் தெருவுக்கு, மாநில துணைப் பொதுச்செயலாளர் திருமாறன் தலைமையில் 40 பேர் ஊர்வலமாக வந்தனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி கைதுசெய்து அங்கிருந்து கொண்டு சென்றனர்.
இந்தப் போராட்டம் குறித்து எஸ்.வி.சேகர் கூறுகையில்,
வேலூரிலும், சென்னையிலும் திருமாவளவன் பற்றி சில உண்மைகளை சொன்னேன். தமிழ் பாதுகாப்பு இயக்கம்நடத்துபவர் பெயரில் தமிழ் இல்லை. தமிழ் பண்பாட்டு உடை அணியாமல் ஜீன்ஸ் அணிகிறார் என்று கூறினேன்.நான் பேசியதற்கு பதில் கூற முடியாதவர்கள் என் வீட்டுமுன் பேராட்டம் நடத்துகிறார்கள்.
போராட்டம் நடத்தியவர்கள் நான் சங்கராச்சாரியாரின் கைக்கூலி என்றார்கள். அவர் எந்த அரசியல் கட்சியும்நடத்தவில்லை. ஜெயலலிதாவின் கைக்கூலி என்று கூறினார்கள். ஜெயலலிதாவின் கைக்கூலியாக இருப்பதில்பெருமை அடைகிறேன்.
தமிழ் செம்மொழி ஆனதற்காக கருணாநிதிக்கு பாராட்டு தெரிவித்த அமைப்பின் பெயர் தமிழ் அகாடமி. அகாடமிஎன்ற சொல்லுக்கு தமிழ் சொல் கிடையாதா? பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தனது பெயரை மருத்துவர்ராமனடிமை என்று மாற்றிக் கொள்வாரா?
தமிழனுக்கு இன்று தேவை உணவு, உடை, இருப்பிடம், நல்ல கல்வி, தனிமனித ஒழுக்கம். இதை கொடுப்பதற்குஎன்ன வழி என்று யோசிக்க வேண்டும். தமிழ் வளர்ந்து நிற்கும்போது அதைப் பேச தமிழன் உயிரோடு நிற்கவேண்டும்.
சிந்திப்பதை விட்டுவிட்டு ஞாயிற்றுக்கிழமை பொழுதுபோகவில்லை என்றால் யாரையோ திருப்திப்படுத்தபோராட்டம் நடத்த கிளம்பிவிடுகிறார்கள். நான் எங்கு சென்றாலும் முற்றுகை நடத்தப் போவதாக கூறியுள்ளார்கள்.தாராளமாக நடத்தட்டும் எதையும் சந்திக்கும் துணிச்சலுடன் தான் ஜெயலலிதா தலைமையை ஏற்று இருக்கிறேன்என்றார் எஸ்.வி.சேகர்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications