ஜெயலட்சுமி: 7 இன்ஸ்பெக்டர்கள், 5 எஸ்.ஐ, 43 போலீஸார் மாற்றம்
மதுரை:
ஜெயலட்சுமி விவகாரம் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த 55 போலீஸார் அதிரடியாக திருநெல்வேலி,ராமநாதபுரத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர்.
ஜெயலட்சுமி விவகாரம் தொடர்பாக தென் மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த சிலர் சஸ்பெண்ட்செய்யப்பட்டுள்ளனர், சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர், சிலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந் நிலையில், மதுரையைச் சேர்ந்த 55 போலீஸார் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக இடமாற்றம்செய்யப்பட்டுள்ளது மதுரை காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்பெக்டர்கள்...
ஜெயலட்சுமி வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள இன்ஸ்பெக்டர் வானமாமலை, எஸ்.எஸ்.காலனி இன்ஸ்பெக்டர்ரவீந்திரன் ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அசோகன் (திலகர் திடல்), வெள்ளையன் (தெப்பக்குளம்), பெரியகருப்பன் (வெடிகுண்டு கண்டுபிடிப்பு சிறப்புப்பிரிவு, ரவீந்திரன் (எஸ்.எஸ். காலனி), வானமாமலை (கரிமேடு), சண்முகசுந்தரம் (தெற்குவாசல்), சுகுமாறன்(தல்லாகுளம்) ஆகிய 7 இன்ஸ்பெக்டர்கள்,
சப்- இன்ஸ்பெக்டர்கள்...
செல்வகனி (தல்லாகுளம்), தேவராஜ் (கீரைத்துரை), முகமதுசக்கிரயா (ஆண்டாள்புரம்), ஜெயராம் (எஸ்.எஸ்.காலனி), சங்கர் (புதூர்) ஆகிய 5 சப் இன்ஸ்பெக்டர்களும், 43 ஏட்டு மற்றும் காவலர்களும் திருநெல்வேலி,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மதுரை மாநகரகாவல்துறை ஆணையர் விஜயக்குமார் பிறப்பித்துள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட இந்த அதிகாரிகளுக்குப் பதிலாக சென்னையிலிருந்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐகள்இடமாற்றம் செய்யப்படுவார்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த அதிரடி இடமாற்றம் மதுரை காவல்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இடமாற்றத்தை எதிர்த்துசிலர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இன்று வழக்குத் தொடரவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மதுரை ஊரகப் பகுதிகளான அவனியாபுரம், திருநகர், திருப்பரங்குன்றம் உள்ளிட்ட இடங்களில் இன்ஸ்பெக்டர்,சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், அங்கு இடமாற்றம் செய்யாமல் தொலைதூரமாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதை காவலர்கள் கடுமையாக ஆட்சேபித்துள்ளனர்.
இளங்கோவன் ஜாமீன் மனு தள்ளுபடி:
இதற்கிடையே ஜெயலட்சுமியைக் கடத்திய வழக்கில் தலைமறைவாகி, கைதான திடீர் நகர் இன்ஸ்பெக்டர்இளங்கோவன் மற்றும் அவரது மைத்துனர் முருகவேல் ஆகியோரது ஜாமீன் மனுக்கள் மாவட்ட செஷன்ஸ்நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு












Click it and Unblock the Notifications