போனஸ், இடைக்கால நிவாரணம்: அள்ளி தரும் ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழக மின் வாரியம், உணவுக் கழகம், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு 10 சதவீத தீபாவளி போனஸ்மற்றும் கருணைத் தொகை வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

மேலும் போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரிய ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றுஅறிவித்துள்ள ஜெயலலிதா, அதுவரை இடைக்கால நிவாரணமாக (Interim relief)மாதத்துக்கு ரூ. 250வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த ஊழியர்களுக்கு 8.33 சதவீத போனஸ், அதாவது ஒருமாத சம்பளம், போனஸாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதை இந்த ஆண்டு 20 சதவீதமாக உயர்த்தித் தரக்கோரியும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தும் வேலை நிறுத்த அறிவிப்பை ஊழியர்சங்கங்கள் அறிவித்துள்ளன.

இந் நிலையில் தமிழக மின் வாரியம், உணவுக் கழகம், போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கான போனஸ்அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.

இதன்படி இந்த ஆண்டு 3 கழகங்களைச் சேர்ந்த ஊழியர்களுக்கும் 8.33 சதவீத போனஸ் வழங்கப்படும். அத்தோடு1.67 சதவீத கருணைத் தொகையும் கூடுதலாக வழங்கப்படுகிறது. மொத்தமாக 10 சதவீத போனஸ் தொகைஊழியர்களுக்குக் கிடைக்கும்.

மேலும் போக்குவரத்துக் கழகங்கள், மின்வாரிய ஊழியர்களுக்கு விரைவில் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்றுஅறிவித்துள்ள ஜெயலலிதா, அதுவரை இடைக்கால நிவாரணமாக மாதத்துக்கு ரூ. 250 வழங்கப்படும் என்றும்அறிவித்துள்ளார்.

இந்தத் தொகை 01.09.2003 முதல் முன் தேதியிட்டு வழங்கப்படும் என்றும், ஊதிய உயர்வு குறித்தபேச்சுவார்த்தையின் முடிவில் ஏற்படும் உடன்படிக்கையைப் பொறுத்து இந்த நிதி சரிகட்டப்படும் என்றும்அறிவித்துள்ளார். மேலும் ஊதிய உயர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் விரைவில் தொடங்கும் என்றும் கூறியுள்ளார்.

ஊழியர்களுக்கு ஜெ. பாராட்டு!!:

இது தொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடந்த திமுக ஆட்சியின்போது மின் வாரியம், போக்குவரத்துக் கழகங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகள்பெரும் நஷ்டத்தை சந்தித்து வந்தன.

ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ஊழியர்களின் கடுமையான உழைப்பு காரணமாக நஷ்டத்திலிருந்து இந்தத்துறைகள் ஓரளவு மீண்டுள்ளன. எனது அரசின் சீரிய திட்டங்களால் நஷ்டத்தில் இருந்து இந்தத் துறைகள் வெளியேவந்துள்ளன. இதற்காக அரசுக்கு ஒத்துழைத்து, கடும் பணியாற்றிய அனைத்து ஊழியர்களுக்கும் முழு மனதுடன் நன்றிதெரிவித்துக் கொள்கிறேன்.

நமது பொருளாதாரத்தின் முதுகெலும்பாகத் திகழும் தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு சிறப்பானவாழ்க்கைத் தரம் அமைத்துக் கொடுத்தால் தான் அவர்கள் ஊக்கத்துடன், முழுத் திறமையுடன் பணியாற்ற முடியும்என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு என்று கூறியுள்ளார் முதல்வர் ஜெயலலிதா.

அத்தோடு மின்வாரிய ஊழியர்களுக்கு சரண் விடுப்பில் இருந்து வந்த கட்டுப்பாடுகளை நீக்குவதாகவும், 2002ம்ஆண்டு டிசம்பருக்கு முன் வேலை நிறுத்தம் செய்த காலகட்டத்தை விடுப்பாகக் கருத முடிவு செய்துள்ளதாரவும்ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+