ஐபிஎஸ்: போலீஸ் அகாடமியை ஏமாற்றிய பெண்
Subscribe to Oneindia Tamil
ஹைதராபாத்:
ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றதாக கூறி ஹைதராபாத்தில் உள்ள தேசிய போலீஸ் அகாடமியில் பயிற்சியில் சேரவந்த தமிழகப் பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
ஹைதராபாத்தின் ராஜேந்திர நகர் பகுதியில் தேசிய போலீஸ் அகாடமி உள்ளது. இங்கு ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த அகாடமிக்கு 26 வயதான மாலதி என்ற பெண் வந்துள்ளார். அங்குள்ள அதிகாரிகளை சந்தித்த அவர், தான்ஐ.பி.எஸ். தேர்வில் வெற்றி பெற்றுள்ளதாகவும், பயிற்சிக்காக வந்துள்ளதாகவும் கூறி ஒரு சான்றிதழைக்கொடுத்தார்.
அந்த சான்றிதழை அதிகாரிகள் பரிசோதித்தபோது அது போலியானது என்று தெரிய வந்தது.
இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, மாலதி தர்மபுரியைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது.இதையடுத்து மாலதியை ஹைதராபாத் போலீஸார் கைது செய்து தமிழக போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications