கர்நாடகத்துக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு
சென்னை:
காவிரியிலிருந்து தமிழகத்திற்கு உரிய நீரை திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சேதுராமன் தொடர்ந்துள்ள இந்த பொது நலமனுவில் கூறியிருப்பதாவது:
கர்நாடகத்தில் நல்ல மழை பெய்து அணைகள் நிரம்பினால் மட்டுமே காவியில் தண்ணீர் திறந்து விடுகிறது கர்நாடகஅரசு. அதாவது அணைகள் நிரம்பிவிடுகிற நிலையில், தங்களது அணைகளைப் பாதுகாக்கும் நோக்கில் மட்டுமேதமிழகத்திற்குத் தண்ணீர் திறந்து விடுகிறது.
மற்ற நேரங்களில் தண்ணீர் இருந்தாலும் திறந்து விட மறுத்து வருகிறது கர்நாடகம். இதனால் தமிழகத்தில்குறுவைப் பயிர் மற்றும் சம்பா சாகுபடிப் பயிர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகின்றன.
எனவே உடனடியாக காவிரியிலிருந்து தமிழகத்திற்குரிய நீரை திறந்து விட கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும்என்று மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி, நீதிபதி கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய முதன்மைடிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இந்த மனு குறித்து அரசு வழக்கறிஞருடன் தலைமை நீதிபதிஆலோசனை நடத்தினார்.
மனு மீதான அரசின் கருத்தைத் தெரிவிக்க அரசு வழக்கறிஞர் கால அவகாசம் கோரினார்.
இதையடுத்து இதற்கு ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications