ஜெயலட்சுமியிடம் சிபிஐ விசாரணை!
மதுரை:
ஏட்டையாவில் ஆரம்பித்து எஸ்.பி. வரை 20க்கும் மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளுடன் முறைகேடானதொடர்பு வைத்திருந்த ஜெயலட்சுமியிடம் இன்று சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.
சிபிஐ கூடுதல் எஸ்.பி. சிவாஜி தலைமையிலான குழு ஜெயலட்சுமியின் பெயரால் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள்ஆரம்பித்த வங்கிக் கணக்குகள் குறித்து மதுரையில் விசாரணை நடத்தியது. இதைத் தொடர்ந்து ஜெயலட்சுமியின்பெற்றோரிடம் இன்னொரு சிபிஐ குழு விசாரித்தது.
ஈரோடு, பொள்ளாச்சியில் போலீஸ் அதிகாரிகளால் ஜெயலட்சுமிக்கு வாங்கித் தரப்பட்ட செல்போன்கள்,தொலைபேசி இணைப்புகள் குறித்தும் இன்னொரு குழு விசாரித்தது. இப்படி பல பக்கமும் பாய்ச்சல் காட்டி தமிழகபோலீசாரை திக்குமுக்காட வைத்த சிபிஐ இன்று ஜெயலட்சுமியிடமே விசாரணையில் இறங்கினர்.
இன்று காலை எல்லீஸ் நகரில் நகரில் உள்ள ஜெயலட்சுமியின் வீட்டுக்கு வந்த சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்குவருமாறு அழைத்தனர். இதையடுத்து தனது வழக்கறிஞர் அழகர்சாமியை உடனே வீட்டுக்கு அழைத்தார்ஜெயலட்சுமி.
பின்னர் அழகர்சாமியுடன் காலை 8.30 மணிக்கு ஜெயலட்சுமி காரில் கிளம்பினார். எங்கோ போகிறீர்கள் என்றுநிருபர்கள் கேட்டபோது, அவரது வழக்கறிஞர் அழகர் சாமி, சிபிஐ விசாரணைக்கு செல்கிறோம் என்று பதில்தந்தார்.
ஜெயலட்சுமியின் பாதுகாப்புக்கு இருந்த போலீசாரையும் வீட்டிலேயே இருக்கச் சொல்விட்டு இருவரும்கிளம்பினர்.
ஜெயலட்சுமியை சிபிஐ அதிகாரிகள் சொக்கிகுளம் பகுதியில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர்.அவர்கள் இருக்கும் இடம் குறித்து அறிய உளவுப் பிரிவு போலீசாரும் ஜெயலட்சுமியின் பிற வழக்கறிஞர்களும்நெடு நேரம் அந்தப் பகுதியை சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications