கலாம் பிறந்த நாள்: மன்மோகன் சிங் வாழ்த்து
பெங்களூர்:
இன்று 74வது பிறந்த நாள் காணும் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கு பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்துதெரிவித்தார்.
கர்நாடகாவில் சுற்றுப்பிரயாணம் மேற்கொண்டிருக்கும் கலாமை மன்மோகன் சிங் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார். அப்போது, கலாம் சுற்றுப்பிரயாணத்தில் இருப்பதால் நேரில் சந்தித்து வாழ்த்துதெரிவிக்க இயலவில்லை என்றும், கலாம் நீண்ட காலம் நாட்டிற்கு சேவையாற்ற வேண்டுமென தானும் நாட்டுமக்களும் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
கலாம் ஒரு நாள் முன்னதாகவே தனது பிறந்த நாளை நேற்று மாணவர்களுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.பெங்களூர் இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ் மையத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில்கேக் வெட்டினார். பின்பு அந்தக் கேக் மாணவர்கள் அனைவருக்கும் வினியோகிக்கப்பட்டது.
அப்போது, பூமியுடன் சேர்ந்து சூரியனை இன்றுடன் நான் 73 முறை சுற்றி முடித்திருக்கிறேன். இன்று முதல் 74வதுசுற்றில் காலடி எடுத்து வைத்திருக்கிறேன். அண்டத்தின் வரலாற்றோடு ஒப்பிடுகையில் மனிதனின் ஆயுட்காலம்என்பது ஒரு நேனோ செகண்ட் தான். எனவே எனது வயதும் ஒரு நேனோ செகண்ட்தான் என்றார் கலாம்.
பின்னர் மாணவர்களிடம் பேசிய கலாம், இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள 260 மில்லியன் மக்களின்வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் பொறுப்பும் மாணவர்களாகிய உங்களிடம் உள்ளது. இந்தியாவில் 540 மில்லியன்இளைஞர்கள் உள்ளனர். வேறெந்த நாட்டிலும் இந்த அளவுக்கு இளைஞர் சக்தி இல்லை.
எனது குறிக்கோள் இந்தியா-2020 என்ற என் கனவுத் திட்டத்தை அடைவது தான். இதை நாடாளுமன்றத்தில் ஏற்கச்செய்து, அதன் மூலம் நாட்டில் உள்ள ஒவ்வொருவரும் அதை நிறைவேற்றச் செய்ய முயலப் போகிறேன்.
வருங்காலத்தில் நேனோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி ஆகியவையே ஆதிக்கம் செலுத்தும். அவற்றில் இந்தியமாணவர்கள் நிபுணத்துவம் பெறுவது அவசியம் என்று கூறினார்.
குற்றவாளிகளே நாடாளுமன்ற உறுப்பினர்களாக மாறி வரும் நிலையில், குடியரசுத் தலைவர் பதவியில் இருப்பதுமகிழ்ச்சி அளிக்கிறதா என்று ஒரு மாணவர் கேட்டார். இதற்கு பதிலளித்த கலாம், அதை விட நாடாளுமன்றத்தில் 50சதவீத உறுப்பினர்கள் பட்டதாரிகளாகவும், டாக்டர் பட்டம் பெற்றவர்களாகவும் இருப்பது என்னை வியப்பில்ஆழ்த்துகிறது என்றார்.
தனது கலந்துரையாடலில் இந்திய விஞ்ஞானிகள் விக்ரம் சாராபாய், சதீஸ் தவான், பிரம் பிரகாஷ், ராமசேஷன்மற்றும் ராஜா ராமண்ணா ஆகியோரை கலாம் விரிவாக நினைவு கூர்ந்தார்.
இன்று பிறந்த நாள் எனினும், கலாம் அதைக் கொண்டாட பிரத்யேகமாக நேரம் ஒதுக்கவில்லை.சுற்றுப்பிரயாணத்தில் இருக்கும் கலாம் மைசூரில் தேசிய இளைஞர் கருத்தரங்கில் கலந்து கொள்ள அங்கு வந்தார்.அங்கு சிறுவர்கள் மத்தியில் பிறந்த நாள் கேக் வெட்டினார்.
பின்னர் அங்கு இருந்தவர்களிடம் பேசுகையில், தியாகையரின் புகழ்பெற்ற, எந்தரோ மகானு பாவலுகீர்த்தனையைப் பாடிக் காட்டினார்.
இன்று பாகல்கான் லயன்ஸ் கிளப் விழாவிலும், டி.ஆர்.டி.ஓ. விழாவிலும் பங்கேற்கிறார். பின்னர் அகமாதபாத்தில்நடைபெறும் சர்வதேச சுற்றுலா கருத்தரங்கிலும் கலந்து கொள்கிறார்.
கலாமுக்கு தட்ஸ்தமிழ்.காம் வாசகர்கள் சார்பில் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications