இலங்கை: கட்சிக்கு அங்கீகாரம்- கருணாவுக்கு சிக்கல்
கொழும்பு:
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து நீக்கப்பட்ட கருணாவின் புதிய அரசியல் கட்சியை பதிவு செய்வதில் சட்டசிக்கல் நிலவுவதாக இலங்கை தேர்தல் ஆணையர் சேனநாயகே கூறியுள்ளார்.
தற்போது ராணுவ உதவியுடன் தலைமறைவாக இருந்து வரும் கருணா தமிழீழ மக்கள் விடுதலைப் புலிகள் என்றபுதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.
ஆனால், அந்தக் கட்சி இன்னும் முறைப்படி பதிவு செய்யப்படவில்லை.
இது குறித்து கொழும்பில் இலங்கை தேர்தல் ஆணையர் சேனநாயகே கூறுகையில்,
தற்போது வட கிழக்கு மாகாணங்களில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் தேர்தல்ஆணைய சட்டப்படி, தேர்தல்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யமுடியாது.
எனவே கருணாவின் புதிய கட்சியும் பதிவு செய்யப்படவில்லை. பதிவு செய்யப்பட்ட கட்சியாக கருணாவின் கட்சிஇயங்குவதாக வெளியாகும் செய்திகள் தவறு என்றார் சேனநாயகே.
சேனநாயகேவின் இந்தப் பேட்டியால் கருணா ஆதரவாளர்களிடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசியல் சட்டப்படி, பதிவு செய்யப்படாத அரசியல் கட்சிகள் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவேஇந்த சட்ட சிக்கலிலிருந்து மீண்டு தங்களது கட்சியை பதிவு செய்வது தொடர்பாக அவர்கள் தீவிர ஆலோசனையில்ஈடுபட்டுள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications