3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்ற தாய்
சிவகாசி:
வறுமை காரணமாக தனது 3 குழந்தைகளையும் தாயே கிணற்றில் எறிந்து கொலை செய்தார். அருப்புக்கோட்டைஅருகே இச் சம்பவம் நடந்துள்ளது.
சிவகாசி ஆனையூர் அருகே உள்ளது காந்தி நகர். இந்த ஊரைச் சேர்ந்த சக்கரைபாண்டிக்கும், மல்லாங்கிணறுஅருகே உள்ள பேயக்குளத்தை சேர்ந்த பெருமாளக்கா (38) என்பவருக்கும் திருமணம் நடைபெற்றது.
இந்த தம்பதிக்கு மாரி (7), ராமு (4), பிரியா (2) மற்றும் சித்ரா (6 மாதம்) என்று 3 பெண் குழந்தைகளும் 1 ஆண்குழந்தையும் உள்ளன. சக்கரைப்பாண்டி ஆடு, மாடு மேய்ந்து வந்திருக்கிறார். குடும்பத்தில் வறுமை அதிகமாகவே,தந்தையிடம் சென்று உதவி கேட்கலாம் என்று பெருமாளக்கா முடிவு செய்திருக்கிறார்.
மூத்த மகள் மாரியை மட்டும் தன் கணவரிடம் விட்டுவிட்டு, ராமு, பிரியா, சித்ரா ஆகியோருடன் தன் தந்தைவீட்டிற்கு சென்றார். ஆனால் அவரது தந்தை உதவி செய்ய மறுத்ததோடு ஏளனமாகப் பேசி அனுப்பி வைத்ததாககூறப்படுகிறது.
இதனால் மனம் வெறுத்த பெருமாளக்கா பேயக்குளம் அருகில் உள்ள கிணற்றில் ஒவ்வொரு குழந்தையாககிணற்றில் தூக்கி போட்டுவிட்டார். சிறிது நேரத்திலேயே 3 குழந்தைகளும் பரிதாபமாக உயிர் இழந்தன.
பின்பு காந்திநகருக்கு வந்தார். குழந்தைகள் எங்கே என்று சக்கரைபாண்டி கேட்டபோது, கிணற்றில் தூக்கி போட்டுகொன்று விட்ட தகவலை கூறியுள்ளார். இதனால் சக்கரைபாண்டி அதிர்ச்சி அடைந்தார். அதற்குள் இந்த தகவல்அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மூலம் சிவகாசி போலீஸாருக்குத் தெரியவந்தது.
போலீஸார் விரைந்து வந்து பெருமாளக்காவை சிவகாசி மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று,விசாரணை நடத்தினர். பெருமாளக்கா குழந்தைகளை தூக்கி போட்ட கிணற்றுக்கு போலீஸார் விரைந்து சென்றனர்.அங்கு 2 குழந்தைகள் மட்டும் கிணற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தன. மற்றொரு குழந்தை நீரில் மூழ்கிஇருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications