கொடைக்கானலில் உருவாகும் கண்ணம்மா வசனம்
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதி தனது கண்ணம்மா படத்திற்கான வசனத்தை கொடைக்கானலில் தங்கி எழுதவுள்ளார்.
ஒரு ஷெட்யூலுக்கு உரிய வசனங்களை ஊட்டியில் தங்கியிருந்து எழுதி முடித்துத் தந்துவிட்டார் கருணாநிதி. இதையடுத்து மீனா, டிவிநடிகர்கள் வெங்கட், பிரேம்குமார், சந்திரசேகர் உள்ளிட்டோர் நடிக்க படத்தின் சூட்டிங் தொடங்கிவிட்டது.
இந் நிலையில் அடுத்த ஷெட்யூலுக்கான வசனம் எழுத கருணாநிதி கொடைக்கானல் செல்கிறார். வரும் 18ம் தேதி மதுரை செல்லும்கருணாநிதி அங்கு சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
அதன் பின்னர் கொடைக்கானல் சென்று 10 நாட்கள் தங்கும் அவர் கண்ணம்மாவுக்கான வசனங்களை எழுதுகிறார்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொடைக்கானல் சென்ற கருணாநிதி அங்கு தான், ரஷ்ய எழுத்தாளர் கார்க்கியின் தாய் காவியத்தை தமிழில்எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே நீண்ட, நீண்ட வசனங்களை எல்லாம் எழுதாமல் காலத்துக்கு ஏற்ப கருணாநிதியின் சினிமா வசன நடையழகு பெருமளவில்மாறிவிட்டதாக கண்ணம்மா படத்தின் இயக்குனரான பாபா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications