தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி திடீர் இடமாற்றம்
டெல்லி:
சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி சுபாஷன் ரெட்டி இடமாற்றம் செய்யப்பட்டு கேரள உயர் நீதிமன்றதலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
ரெட்டிக்குப் பதிலாக உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜூ, சென்னைஉயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
பல்வேறு காரணங்களால் சர்ச்சைக்குள்ளான உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்யுமாறு மத்தியஅரசுக்கு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி லஹோத்தி தலைமையிலான குழு பரிந்துரை செய்துள்ளது.
சுபாஷன் ரெட்டிக்கு எதிராக உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் உள்பட மாநிலம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களைச்சேர்ந்த வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தி தமிழகத்தில் நீதித்துறையையே ஸ்தம்பிக்க வைத்ததுகுறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ரெட்டியை இடமாற்றம் செய்ய லஹோத்தி பரிந்துரைத்தாகத் தெரிகிறது.
கேரள தலைமை நீதிபதி சோத்தி இடமாற்றம் செய்யப்பட்டு கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார். கர்நாடக தலைமை நீதிபதி ஜெயின் சமீபத்தில் ஓய்வு பெற்றதால் அந்த இடம் காலியாகஉள்ளது.
இதே போல பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ராய் இடமாற்றம் செய்யப்பட்டு பிகார்மாநிலம் பாட்னா நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுகிறார்.
ராய்க்குப் பதிலாக கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி அல்தமஸ் கபீர், பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத் தலைமைநீதிபதியாக நியமிக்கப்படுவார்.
கேரள தலைமை நீதிபதி சோத்தி இடமாற்றம் செய்யப்பட்டு கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாகநியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்துக்கு மாற்றப்பட்ட மார்கண்டேய கட்ஜூவுக்குப் பதிலாக கொல்கத்தா நீதிமன்ற நீதிபதி ராய், அலகாபாத்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவார்.
நீதிபதிகள் இடமாற்றம் குறித்த தனது பரிந்துரையை கடந்த வாரத்திலேயே மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜிடம்தலைமை நீதிபதி லஹோத்தி குழு வழங்கிவிட்டது. இந்தப் பரிந்துரைகளை பிரதமர் அலுவலகம் மூலமாகஜனாதிபதியின் ஒப்புதலுக்கு சட்ட அமைச்சகம் அனுப்பி வைக்கும்.
அவரது ஒப்புதல் கிடைத்தவுடன் அடுத்த இரு வாரங்களில் முறைப்படியான டிரான்பர் உத்தரவுகளை சட்டஅமைச்சகம் பிறப்பிக்கும் என்று தெரிகிறது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications