செம்மொழி: வாக்காளர்களுக்கு கருணாநிதி பாராட்டு
மதுரை:
தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்டதற்கு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 மக்களவைத்தொகுதிகளையும் சேர்ந்த வாக்காளர்களே காரணம். செம்மொழியானதன் பெருமை அவர்களுக்கே போய்ச் சேரவேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
மதுரை முத்தமிழ்ச் சங்கம் என்ற அமைப்பின் சார்பில் தமிழை செம்மொழியாக அறிவிக்க பாடுபட்டதற்காககருணாநிதிக்கு மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் குன்றக்குடி பொன்னம்பலஅடிகளார், திருப்பனந்தாள் முத்துக்குமாரசாமி தம்பிரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியில் கருணாநிதி பேசுகையில், தமிழ் செம்மொழியானதற்கு, 40 தொகுதி வாக்காளர்களும், ஒட்டுமொத்ததமிழர்களின் 100 ஆண்டு கால போராட்டமே காரணம். இந்தப் பெருமை அவர்களுக்கே போய்ச் சேர வேண்டும்.நாம் வெறும் கருவிதான்.
தமிழ் செம்மொழியானால் மட்டும் போதாது. இந்தியாவின் ஆட்சி மொழியாக வேண்டும். அந்தக்கோரிக்கையையும் மத்திய அரசிடம் வைத்துள்ளோம். விரைவில் அந்த செய்தியையும் கேட்கும் பாக்கியம்நமக்குக் கிடைக்கும் என்றார் கருணாநிதி.
பாராட்டு விழாவில் அப்துல் ரகுமான், அனந்தகிருஷ்ணன், க.ப.அறவாணன், அவ்வை நடராஜன், சேதுராமன்,வைரமுத்து முன்னாள் நீதிபதிகள் ரத்தினவேல் பாண்டியன், கோகுல கிருஷ்ணன், உள்ளிட்டோர் கலந்து கொண்டுகருணாநிதியை வாழ்த்தினர்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications