பாஜக தலைவரானார் அத்வானி: ஜெவுடன் பேச்சு
டெல்லி:
பாஜக தலைவராக முன்னாள் துணைப் பிரதமர் அத்வானி இன்று மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.பதவியேற்ற கையோடு வீரப்பன் கொல்லப்பட்டதற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொலைபேசி மூலம் வாழ்த்துதெரிவித்தார் அத்வானி.
கட்சியின் தலைவராக அத்வானி பதவியேற்பது இது மூன்றாவது முறையாகும். மக்களவைத் தேர்தலைத் தொடர்ந்துமகாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க. படுதேர்தல்வி அடைந்ததால், தலைவர் பதவியில் இருந்துவிலகினார் வெங்கையா நாயுடு.
அவர் விலகியதாகக் கூறப்பட்டாலும், வி.எச்.பி., ஆர்.எஸ்.எஸ். ஆகியவற்றால் நிர்பந்திக்கப்பட்டுவிலக்கப்பட்டதாகவே தெரிகிறது. கட்சியின் சரிவைத் தடுக்க மீண்டும் தானே தலைவராவதாக நேற்று நடந்தபா.ஜ.க. உயர் மட்டக் கூட்டத்தில் அத்வானி அறிவித்தார்.
இந் நிலையில் இன்று கட்சி அலுவலகத்தில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தலைவராக அத்வானிபொறுப்பேற்றுக் கொண்டார். இதையடுத்து தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள்மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
பதவியேற்ற பின் முதல்வர் ஜெயலலிதாவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அத்வானி, வீரப்பன்கொல்லப்பட்டதற்காக வாழ்த்துத் தெரிவித்தார். அப்போது பா.ஜ.க. தலைவராகப் பதவியேற்றதற்காகஅத்வானிக்கு ஜெயலலிதாவும் வாழ்த்துத் தெரிவித்தார்.
அத்வானி தலைவரானதையடுத்து கட்சியில் வாஜ்பாயும் மெதுவாக ஓரங்கட்டப்படுவார் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications