For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகிழ்ச்சிக் கடலில் ஜெயலலிதா!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

தமிழக அதிரடிப் படையினரின் விடா முயற்சி காரணமாகவும், எனது அயராத நம்பிக்கை காரணமாகவும் இன்றுவீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் நேற்று நள்ளிரவிலேயே ஜெயலலிதா அறிக்கைவெளியிட்டார். அதன் விவரம்:

சந்தனக் கடத்தல் வீரப்பன், அவனது கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், கோவிந்தன், சந்திரே கெளடாஆகியோர் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பாடி என்ற வனப் பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தமிழகஅதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் எனக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்தார். இதைக் கேட்டதும்நான் அளவில்லாத மகிழ்ச்சி அடைந்தேன்.

கடந்த பல வருடங்களாக தமிழக காவல்துறைக்கும், கர்நாடகத்திற்கும் பெரும் சவாலாக விளங்கிய வீரப்பனைப்பிடிக்க எனது முந்தைய ஆட்சிக் காலத்தின்போதுதான், 1993ம் ஆண்டில், சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுவீரப்பன் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டது.

இந்த தமிழக அதிரடிப் படையினரின் விடா முயற்சியாலும், கடுமையான உழைப்பாலும், அயராதநம்பிக்கையாலும் இன்று வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு தமிழக, கர்நாடக மக்களுக்கு பெரும் நிம்மதியையும்,சந்தோஷத்தையும் ஏற்படுத்தியுள்ளனர்.

வீரப்பனைப் பிடிக்கும் பணிக்காக தங்களது குடும்பங்களை மறந்து, சுகபோகங்களை மறந்து, வசதிகளை துறந்துகாட்டுக்குள் மழையிலும், வெயிலிலும், பனியிலும் அவதியுற்ற போதிலும், வீரப்பனைப் பிடித்தே தீருவோம் என்றகடுமையான சவாலை மிகவும் தீரத்துடன் ஏற்று வீரப்பனை சுட்டு வீழ்த்திய அதிரடிப்படையினரை பாராட்டுகிறேன்.

இந்த தீரச் செயலுக்குத் தலைமை தாங்கிய அதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார், எஸ்.பிக்கள், டி.எஸ்.பிக்கள்,இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள், காவலர்கள், ஏவலர்கள், போலீஸாருக்குத் தகவல் கொடுத்தவர்கள் எனஅனைத்துத் தரப்பினரையும் பாராட்டுகிறேன்.

வீரப்பனைப் பிடிக்கும் வேட்டையை நான் முடுக்கி விட்டபோது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எனது முயற்சியைவிமர்சித்தன. பத்திரிக்கைகளும் கூட அவநம்பிக்கையுடன் இருந்தன. வீரப்பனைப் பிடிக்கவே முடியாது என்றுசெய்திகளும் வெளியிட்டன.

ஆனால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் நான் தொடர்ந்து மேற்கொண்ட முயற்சியின் விளைவாகவும்,தமிழக அதிரடிப்படையினன் கடினமான உழைப்பின் காரணமாகவும் இன்று வீரப்பன் சகாப்தம் முடிவுக்குவந்துள்ளது.

வீரப்பன் நிச்சயமாக பிடிபடுவான் என்ற எனது பொறுமையும், நம்பிக்கையும், விடா முயற்சியும் இன்று சிறந்தபலனைக் கொடுத்துள்ளன.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கட்டுப்பாட்டுக்குள்தான் உள்ளது, தமிழக காவல்துறை உலகிலேயே மிகச் சிறந்தகாவல்துறை என்பது மீண்டும் ஒரு முறை எனது ஆட்சியில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்பதில் மெத்த மகிழ்ச்சிகொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை டெல்லியில் இருக்கும் ஆளுநர் ராம் மோகன் ராவுக்கும் ஜெயலலிதாதெரிவித்துள்ளார். இதைக் கேட்டதும் ஆளுநர் பெரும் மகிழ்ச்சி அடைந்ததா ஜெயலலிதா தனது அறிக்கையில்தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X