சென்னைக்கு நவம்பர் முதல் கிருஷ்ணா நீர்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி:

சென்னைக்கு நவம்பர் மாத இறுதியில் 5 டி.எம்.சி. கிருஷ்ணா நதி நீர் அனுப்பப்படும் என்று ஆந்திர மாநிலஅதிகாரி தெரிவித்தார்.

சென்னைக்கு கிருஷ்ணா நீரை விடுவிப்பது தொடர்பாக திருப்பதியில் தமிழக தலைமை செயலாளர் லட்சுமிபிரானேஷ் தலைமையிலான அதிகாரிகள் குழுவும், ஆந்திர மாநில தலைமை செயலாளர் மோகன கன்டாதலைமையிலான அதிகாரிகள் குழுவும் ஆலோசனை நடத்தியது.

இக் கூட்டம் முடிந்த பிறகு ஆந்திர மாநில நீர்ப்பாசனத்துறை செயலாளர் சுரேஷ் சந்தா நிருபர்களிடம் பேசுகையில்,

சென்னைக்கு அனுப்புவதற்காக ஸ்ரீசைலம் நீர்த்தேக்கத்தில் இருந்து கண்டலேறு அணைக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து தமிழ்நாட்டிற்கு அடுத்த மாதம் 16 அல்லது 17ம் தேதி தண்ணீர்விடப்படும். இத் தண்ணீர் அடுத்த மாத இறுதியில் சென்னைக்கு வந்து சேரும்.

இடையே தண்ணீர் திருட்டு நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் ஆந்திர அரசுமேற்கொள்ளும்.

விநாடிக்கு 4,000 கன அடி நீர் திறந்து விடவேண்டும் என்றுதான் தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டிருந்தார்.ஆனால், ஸ்ரீசைலத்தில் இருந்து ஏற்கனவே 8,000 கன அடி தண்ணீரை ஆந்திர அரசு திறந்துவிட்டு இருக்கிறதுஎன்று கூறினார்.

பேச்சுவார்த்தை குறித்து திருப்தி தெரிவித்த தமிழக அதிகாரிகள், சென்னை நகரின் தாகத்தை தீர்க்க ஆந்திரஅரசின் உண்மையான முயற்சி இது என்று கூறினார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+