23ம் தேதி பிரதமர் சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கல்பாக்கம் அணு ஆராய்ச்சி மையத்தில் புதிய அணு உலைகளை தொடங்கி வைக்க பிரதமர் மன்மோகன் சிங்வரும் 23ம் தேதி சென்னை வருகிறார்.
வருகிற 23ம் தேதி (சனிக்கிழமை) காலை 10.45 மணிக்கு சிறப்பு விமானத்தில் மன்மோகன் சிங் சென்னைமீனம்பாக்கம் விமான நிலையம் வந்து சேருகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் செல்கிறார்.
அங்கு இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் புதிய அணு உலைகளை தொடங்கி வைக்கிறார். பின்பு பிற்பகல்3 மணிக்கு மன்மோகன்சிங் ஹெலிகாப்டர் மூலம் சென்னை வருகிறார். அன்று கோபாலபுரத்தில் உள்ள திமுகதலைவர் கருணாநிதியின் இல்லத்திற்குச் சென்று அவரை சந்தித்துப் பேசுகிறார்.
பின்னர் அவர் டெல்லி திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications