அடுத்த குறி தமிழ் தேசிய தீவிரவாதிகளுக்கு...
ஈரோடு:
20 ஆண்டுகளுக்கும் மேலாக காவல்துறைக்கு டேக்கா கொடுத்து வந்த சந்தனக் கடத்தல் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட தகவல் அறிந்ததும் தமிழக அதிரடிப் படையினர் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் அதைக்கொண்டாடினர்.
தமிழக மற்றும் கர்நாடகத்தைச் சேர்ந்த 100க்கும் அதிகமான காவல்துறையினரையும், வனத்துறையினைரையும்மிகக் கொடூரமாக கொன்றவன் வீரப்பன். தலையைத் துண்டித்தும், கண்ணி வெடியில் சிக்க வைத்தும், யானையைச்சுடும் துப்பாக்கிகளால் உடலில் பெரிய ஓட்டை போட்டும் கொடூரமாகக் கொன்றவன் வீரப்பன்.
இந் நிலையில் வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டான் என்ற தகவல் நேற்று நள்ளிரவில் அதிரடிப்படைமுகாம்களுக்குப் பரவியதும் அங்கு தீபாவளிக் கொண்டாட்டம் ஆரம்பித்தது.
மனைவி, குழந்தைகள், குடும்பத்தினரைப் பிந்து காட்டுக்குள் விலங்குகள் போல அலைய வைத்து விட்ட வீரப்பன்செத்தான் என்ற தகவல் அவர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்தும், ஆடிப்பாடியும் அதிரடிப்படையினர் கொண்டாடினர்.
விலங்குகளை விரட்ட வைத்திருந்த பட்டாசுகளையும் வெடித்து உற்சாகமாகக் கொண்டாடினர்.
இரவோடு இரவாக அதிரடிப்படை முகாம்களில் கேசரியும் கிண்டப்பட்டு ஒருவருக்கு ஒருவர் அதை ஊட்டிமகிழ்ந்தனர். முகாமுக்குச் சென்ற நிருபர்களையும் அதிரடிப்படையினர் விடவில்லை. வாயில் இனிப்பைத்திணித்தனர்.
அடுத்த மாதம் வரப் போகும் தீபாவளியை இப்போதே கொண்டாடி வருகின்றனர் அதிரடிப்படையினர்.
வீரப்பனை சுட்டு வீழ்த்திய படையில் இடம் பெற்றிருந்த அனைத்து அதிரடிப் படையினருக்கும் பதவி உயர்வுவழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
வீரப்பன் படலம் முடிவுக்கு வந்தாலும் கூட இன்னும் சிறிது காலத்திற்கு அதிரடிப்படையினரின் நடவடிக்கைகள்காட்டுப் பகுதியில் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காட்டில் வீரப்பன் உதவியுடன் இயங்கி வந்த தமிழ் தேசிய தீவிரவாத அமைப்புகளை ஒடுக்கும் முயற்சிகளில்அடுத்து அதிரடிப்படை இறங்கும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications