For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முடிந்தது வீரப்பனின் கொலை சகாப்தம்!

By Staff
Google Oneindia Tamil News

தர்மபுரி:

கூசை முனியசாமி வீரப்பன் என்ற இயற்பெயரும் சந்தனக் கடத்தல் மன்னன் என்ற செல்லப் பெயரும் கொண்டவீரப்பனின் சகாப்தம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது.

1952ம் ஆண்டு ஜனவரி மாதம் 18ம் தேதி தர்மபுரி மாவட்டம் கோபிநத்தம் அருகே கர்நாடக எல்லையை ஒட்டியகொள்ளேகால் வன கிராமத்தில் பிறந்தவன் வீரப்பன். 10 வயதிலேயே துப்பாக்கி ஏந்தினான்.

காட்டு யானைகளை சுட்டுக் கொல்வது, சந்தன மரங்களை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடத்தொடங்கினான் வீரப்பன். 1969ம் ஆண்டு 17 வயதாகும் போது ஒரு போலீஸ்காரரை கொன்றதன் மூலம் முதல்கொலையைச் செய்தான் வீரப்பன். அன்று முதல் அவனது வாழ்க்கையும் மாறிப் போனது.

காட்டுக்குள் தனக்கென கோஷ்டியைச் சேர்த்துக் கொண்ட வீரப்பன் சந்தன மரக் கடத்தலில் தீவிரமாக ஈடுபடஆரம்பித்தான். தனது எதிராளிகளை சுட்டுக் கொல்வது அவனது வழக்கமாயிற்று.

1972ம் ஆண்டு கர்நாடக போலீஸாரிடம் முதல் முறையாக சிக்கினான் வீரப்பன். அப்போது எடுக்கப்பட்டபுகைப்படம்தான், நக்கீரன் ஆசியர் கோபால் காட்டுக்குச் சென்று வீரப்பனை சந்திக்கும் வரை வீரப்பனின் உருவம்என்ன என்பது குறித்து காவல்துறைக்கும் பொது மக்களுக்கும் ஒரே ஆதாரமாக இருந்து வந்தது.

1985ம் ஆண்டில் இருந்து கொலை வெறி அதிகமாகி கிட்டத்தட்ட சைகோவாகவே மாறினான் வீரப்பன். தனக்குஎதிரான வனத் துறையினர், காவல்துறையினரை கடத்திச் சென்று கொல்வது, ஏமாற்றி அழைத்துச் சென்று கொலைசெய்வது, கண்ணி வெடித் தாக்குதல் நடத்துவது என தொடர் கொலைகளில் இறங்கினான்.

1987 ஜூன் 14ம் தேதி வன அதிகாரி சிதம்பரத்தை பேச்சு நடத்த வரச் சொல்லி அழைத்து சுட்டுக் கொன்றான்வீரப்பன்.

1989ம் ஆண்டு ஆகஸ்ட் 4ம் தேதி கர்நாடக வனத்துறை அதிகாரி மோகனய்யாவை சுட்டுக் கொன்றான்.

1990ம் ஆண்டு கர்நாடக அரசு வீரப்பனைப் பிடிக்க சிறப்பு அதிரடிப்படையை அமைத்தது.

அதே ஆண்டு வீரப்பன் கும்பலைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரை தமிழக, கர்நாடக போலீஸார் பிடித்தனர்.

1991ம் ஆண்டு கர்நாடக சிறப்பு அதிரடிப்படைத் துணைத் தலைவர் சீனிவாஸை ஏமாற்றி வரவழைத்து தலையைத்துண்டித்துக் கொலை செய்தான் வீரப்பன்.

1992ம் ஆண்டு கர்நாடக தொழிலதிபர் சம்பங்கி ராமய்யாவின் மகன் கடத்தப்பட்டார். அவரை விடுவிக்கவீரப்பனுக்கு ரூ. 15 லட்சம் கொடுக்கப்பட்டது.

1992ம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் தேதி மைசூர் மாவட்ட எஸ்.பி. ஹரிகிருஷ்ணா உள்ளிட்ட 6 கர்நாடக போலஸாரைவீரப்பன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றான்.

1993ம் ஆண்டு பிப்ரவரி மாதம் கர்நாடக சிறப்பு அதிரடிப்படை தலைவராக சங்கர் பித்ரி நியமிக்கப்பட்டார். இவர்வீரப்பனுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். வீரப்பனுக்கு உதவி செய்த கிராமத்தினரை அடித்து நொறுக்கினார்.வீரப்பனும் பித்ரியும் ஒருவருக்கு ஒருவர் சவால்கள் விட ஆரம்பித்தனர்.

1993ம் ஆண்டு தர்மபுரி மாவட்டம் பாலாற்றுப் பாலத்திற்குக் கீழே அவன் வைத்த கண்ணி வெடியில் சிக்கி 22போலீஸார் உடல் சிதறி இறந்தனர். அது நடந்த ஒரே மாதத்தில் ராமாபுரம் காவல் நிலையத்தைத் தாக்கிய வீரப்பன்மற்றும் அவனது கும்பல் 5 போலீஸாரை சுட்டுக் கொன்றது.

அதே ஆண்டு ஜூன் மாதம் பத்ரிபடுகு என்ற இடத்தில் போலீஸாருக்கு உளவு சொன்ன 8 பேரை வெட்டிக்கொன்றான் வீரப்பன்.

1994ம் ஆண்டு டிசம்பர் மாதம் டி.எஸ்.பி. சிதம்பரநாதன் உள்ளிட்ட 6 பேரை வீரப்பன் கும்பல் கடத்திச் சென்றுபின்னர் விடுவித்தது. 1995ம் ஆண்டு நவம்பர் மாதம் அந்தியூல் வனத்துறையினர் 3 பேர் அவனால்கடத்தப்பட்டனர். அதே ஆண்டு டிசம்பர் மாதம் 3 போலீஸாரை வீரப்பன் கும்பல் சுட்டுக் கொன்றது.

1997ம் ஆண்டு வனத்துறையைச் சேர்ந்த 10 பேரை வீரப்பன் கும்பல் கடத்தியது. பின்னர் அக்டோபர் 9ம் தேதிசுற்றுலாப் பயணிகளை வீரப்பன் கடத்தினான்.

சரணடைய விருப்பம் தெரிவித்து கேசட் அனுப்பினான் வீரப்பன். அக்டோபர் 31ம் தேதிக்குள் சரணடையுமாறுதமிழக அரசு வீரப்பனுக்குக் கெடு விதித்தது. அப்போது முதல்வராக இருந்தவர் கருணாநிதி.

நக்கீரன் கோபால் காட்டுக்குள் சென்று வீரப்பனிடம் சரணடைவது குறித்துப் பேசினார். ஜனாதிபதியிடம் இருந்துஎழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை கேட்ட வீரப்பன் பின்னர் அதை தளர்த்திக் கொண்டதாக கோபால் தெரிவித்தார்.

1998ம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி வீரப்பன் கும்பலைச் சேர்ந்த 3 பேர் சரணடைந்தனர். 19ம் தேதி மேலும் 5 பேர்சரணடைந்தனர்.

1998ம் ஆண்டு நவம்பர் மாதம் வீரப்பன் வேட்டை மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டது.

2000மாவது ஆண்டு ஜூன் 15ம் தேதி கர்நாடக இன்ஸ்பெக்டரும், அவரது நண்பரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதற்கெல்லாம் உச்சகட்டமாக அதே ஆண்டு கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோதுதான் இந்தியாமுழுவதும் வீரப்பன் குறித்த பயம் விஸ்வரூபமெடுத்தது.

ராஜ்குமாரை விடுவிக்க 10 நிபந்தனைகளை விதித்தான் வீரப்பன். வீரப்பனின் கோரிக்கைகளில் சிலவற்றை தமிழகஅரசு ஏற்றது.

வீரப்பன் கோரிக்கைகப்படி கைது செய்யப்பட்டிருந்தவர்களை விடுவிக்க தடை கோரி முன்னாள் கர்நாடககாவல்துறை அதிகாரியின் தந்தை உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம்கடும் கண்டனம் தெரிவித்து யாரையும் விடுதலை செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது.

ராஜ்குமாரை மீட்க காட்டுக்குச் செல்லத் தயார் என்று நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். இறுதியில் கிட்டத்தட்ட 3மாதங்களுக்குப் பிறகு தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்களின் முயற்சியின்காரணமாக ராஜ்குமாரை விடுவித்தான் வீரப்பன்.

ராஜ்குமார் உயிருடன் மீட்கப்பட்ட பிறகு வீரப்பன் வேட்டையை தமிழக அரசும், கர்நாடக அரசும் தீவிரப்படுத்தின.வீரப்பனை உயிருடனோ, பிணமாகவோ பிடிக்காமல் ஓய மாட்டேன் என்று முதல்வர் ஜெயலலிதா சபதம் செய்தார்.

2001ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி தமிழக அதிரடிப்படைத் தலைவராக வால்டேர் தேவாரம் நியமிக்கப்பட்டார்.கர்நாடக காட்டுக்குள் இருந்த அம்மாநில அதிரடிப்படை ஜூன் 18ம் தேதி வாபஸ் பெறப்பட்டது.

ஆகஸ்ட் 26ம் தேதி கர்நாடக முன்னாள் அமைச்சர் நாகப்பாவை வீரப்பன் கடத்தினான். இதனால் மீண்டும்பரபரப்பு ஏற்பட்டது. ஜெயலலிதாவை சந்தித்து நாகப்பாவின் குடும்பத்தினர் உதவுமாறு கோரினர்.

கொளத்தூர் மணி மூலம் வீரப்பனுக்கு கேசட் அனுப்பப்பட்டது. இருப்பினும் நாகப்பாவை விடுவிக்க வீரப்பன் முன்வரவில்லை. கொளத்தூர் மணியை தூதுவராக அனுப்புமாறு கூறி வீரப்பனிடமிருந்து நாகப்பா குடும்பத்தினருக்குகேசட் வந்தது.

கொளத்தூர் மணியை தூதுவராக அனுப்ப கர்நாடகம் முடிவு செய்தது. கர்நாடக சிறையில் இருந்த அவர் ஜாமீன்கோரி மனு செய்தார். இந் நிலையில் நாகப்பா மர்மமான முறையில் பிணமாக காட்டுக்குள் கண்டெடுக்கப்பட்டார்.

அவரை தாங்கள் சுடவில்லை என்று வீரப்பன் தெளிவுபடுத்தினான். கர்நாடக அதிரடிப்படையினர்தான்நாகப்பாவை சுட்டுக் கொன்றதாக பின்னர் கூறப்பட்டது.

2003ம் ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி, வீரப்பன் பிடியிலிருந்து ராஜ்குமாரை மீட்க ரூ. 20 கோடி பணம்கொடுக்கப்பட்டதாக கர்நாடக முன்னாள் டிஜிபி தினகர் பரபரப்பு தகவலை வெளியிட்டார்.

ஏப்ரல் 12ம் தேதி வீரப்பன் தொடர்பு உள்ளிட்ட புகார்களின் பேரில் நக்கீரன் கோபால் பொடா சட்டத்தின் கீழ்கைது செய்யப்பட்டார்.

நவம்பர் 20ம் தேதி அதிரடிப்படைத் தலைவராக இருந்து வந்த நடராஜ் மாற்றப்பட்டு விஜயக்குமார் புதியதலைவராக நியமிக்கப்பட்டார்.

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக, கர்நாடக அரசுகளை படாத பாடு படுத்தி வந்த வீரப்பனின்வாழ்க்கைக்கு ஒரு வழியாக முடிவு வந்துள்ளது. தந்தத்திற்காக கிட்டத்தட்ட 2000 யானைகளையும், கடத்தலைத்தடுக்க முயன்ற 130க்கும் மேற்பட்ட வனத்துறையினர், காவலர்கள் உள்ளிட்டோரையும் வீரப்பன் கொன்றுகுவித்துள்ளான்.

இது தவிர காட்டில் தனது எதிரிகள் பலரையும் அவன் கொன்று குவித்துள்ளான். அதற்கெல்லாம் கணக்கு வழக்கேகிடையாது.

தமிழக, கர்நாடக அரசுகள் வீரப்பன் தலைக்கு ரூ. 5.5. கோடி வரை விலை வைத்திருந்தன என்பதுகுறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X