வீரப்பன் சரணடைய மறுத்தான்: விஜய்குமார் பேட்டி

Subscribe to Oneindia Tamil

தர்மபுரி:

Vijayakumarவீரப்பனை சரணடையுமாறு இரண்டு முறை கூறியும் அவன் மறுத்ததால்தான் சுட்டுக் கொல்லப்பட்டான் என்றுதமிழக அதிரடிப்படை தலைவர் விஜயக்குமார் கூறியுள்ளார்.

சந்தனக் கடத்தல் வீரப்பனைச் சுட்டுக் கொன்ற நடவடிக்கைக்குத் தலைமை தாங்கிச் சென்ற விஜயக்குமார்பரபரப்பான வேட்டைக்குப் பின் செய்தியாளர்களிடம் நடந்தது குறித்து சுருக்கமாக விவத்தார். அவர் கூறியதாவது:

வீரப்பன் கும்பலைச் சேர்ந்த சிலர் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பாடி வனப் பகுதியில் நடமாடுவதாக எங்களுக்குத்தகவல் வந்தது. இதையடுத்து அதிரடிப்படை டி.எஸ்.பி. உசேன், இன்ஸ்பெக்டர் ராஜாராமன் உள்ளிட்டோர்தலைமையிலான காவலர்கள் அங்கு விரைந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

பின்னாலேயே நாங்களும் சென்றோம். இரவு 10.50 மணியளவில் ஒரு ஆம்புலன்ஸ் அப்பகுதியில் வந்தது. அந்தஆம்புலன்ஸை நிறுத்துமாறு நாங்கள் உத்தரவிட்டோம். இதையடுத்து ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டது. உடனேயேஆம்புலன்ஸ் டிரைவர் அதிலிருந்து குதித்து காட்டுக்குள் ஓடினார். இருட்டில் அவன் காட்டுக்குள் புகுந்ததால்அவனைப் பிடிக்க முடியவில்லை.

இதனால் உஷாரடைந்த நாங்கள் ஆம்புலன்ஸில் இருந்தவர்களை வெளியே வருமாறு பணித்தோம். ஆனால்அவர்கள் எங்களை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

இதையடுத்து வெளியே வந்துவிட்டால் ஒரு பாதகம் நேராது, உயிருக்கு ஆபத்து வராது என்று கூறி மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுத்தோம். ஆனால் அவர்கள் அதை கேட்கும் மன நிலையில் இல்லை.

இதையடுத்து எஸ்.பி.செந்தாமரைக்கண்ணன் மற்றும் அதிரடிப்படையினர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதில்வேனில் இருந்த நான்கு பேரும் கொல்லப்பட்டனர்.

பின்னர் உள்ளே சென்று பார்த்தபோதுதான் வீரப்பனும் அக் கும்பலில் இருந்தது தெரியவந்தது. காவல்துறைதரப்பில் டி.எஸ்.பி. உசேன், இன்ஸ்பெக்டர் ராஜராஜன், காவலர்கள் தண்டபாணி, ராமசாமி ஆகியோர்காயமடைந்தனர்.

அவர்கள் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார் விஜயக்குமார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+