அரசு ஊழியர்களுடன் இன்று ஜெ. பேச்சு
சென்னை:
அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன் முதல்வர் ஜெயலலிதா இன்று பேச்சு நடத்துகிறார். அரசு ஊழியர்களுக்குசாதகமாக சில அறிவிப்புகளை அவர் வெளியிடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள் மத்தியில்நிலவுகிறது.
அகவிலைப்படி உயர்வு, சரண் விடுப்பு ஊதியம் உள்ளிட்ட சுமார் 50 கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்சங்கப் பிரதிநிதிகளுடன் நேற்று தமிழக அரசு சார்பில் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடந்தது.
இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், பொன்னையன், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ், நிதித்துறைச்செயலாளர் நாராயணன் உள்ளிட்டோர் அரசு சார்பிலும், அரசு ஊழியர்கள் சார்பில் 31 ஊழியர் சங்கப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தையின் இறுதியில் வெளியே வந்த அரசு ஊழியர் ஒன்றியத் தலைவர் சூரியமூர்த்திசெய்தியாளர்களிடம் பேசுகையில், மிகவும் சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை நடந்தது. திருப்தியாகசெல்கிறோம். இருப்பினும் எந்த இறுதி முடிவும் எடுக்கப்படவில்லை. முதல்வருடன் கலந்து பேசி இன்று நல்லமுடிவாகச் சொல்கிறோம் என்று அமைச்சர்கள், அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் என்றார்.
முதல் கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இன்று முதல்வர் ஜெயலலிதா, அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளுடன்பேச்சுவார்த்தை நடத்துகிறார். பிற்பகல் 2 மணிக்கு நடைபெறும் இந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு அரசுஊழியர்களுக்கு சாதகமாக சில முடிவுகளை ஜெயலலிதா அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர்கள்மத்தியில் நிலவுகிறது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications