என்னையாவது வாழவிடுங்கள்: முத்துலட்சுமி

Subscribe to Oneindia Tamil

மேட்டூர்:

என் கணவர் இறந்துவிட்டார். இனியாவது என்னை நிம்மதியாக வாழ விடவேண்டும் என்று வீரப்பனின் மனைவிமுத்துலட்சுமி கூறியுள்ளார்.

வீரப்பனின் உடல் இன்று காலை மூலைக்காடு கிராமத்தில் புதைக்கப்பட்டபின்பு, முத்துலட்சுமி நிருபர்களுக்குபேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

என் கணவரை துப்பாக்கிச் சண்டையில் கொன்றதாக அதிரடிப்படையினர் சொல்கிறார்கள். அப்படி எல்லாம் எதுவும்நடந்திருக்காது. அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பார்.

என் கணவருக்கும், வெளியுலக ஆட்களுக்கும் இடையே பாலமாக இருந்தவர் கனகராஜ். அவர் மீதுதான்எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. வீரப்பன் வெளியில் வந்த ரகசிய தகவலை அவர்தான் அதிரடிப்படைக்குகூறியிருக்க வேண்டும். அவரால்தான் என் கணவர் பிடிபட்டார்.

இப்போது எல்லாம் முடிந்து விட்டது. நான் ஆதரவற்று உள்ளேன். இனி என் 2 மகள்களையும் எப்படி காப்பாற்றப்போகிறேன் என்று எனக்குத் தெரியவில்லை.

கடந்த 10 ஆண்டுகளாக அதிரடிப் படையினரால் என் வாழ்க்கையில் அமைதி பறி போய்விட்டது. என்னைஅவர்கள் நிம்மதியாக வாழ விடவில்லை. எங்கு போனாலும் பின் தொடர்ந்து வந்தார்கள். என் சொத்துக்கள், பணம்அனைத்தையும் முடக்கி வைத்தனர். அதோடு என் மீது ஒரு கொலை வழக்கையும் பதிவு செய்தனர்.

இப்போது என் கணவரை கொன்று விட்டனர். இனியாவது என்னை அதிரடிப்படையினர் நிம்மதியாகவாழவிடவேண்டும். என் மீதான எல்லா வழக்கு களையும் வாபஸ் பெற வேண்டும். என்னிடம் இருந்து பறித்தசொத்துக்களையும், பணத்தையும் என்னிடம் திருப்பித் தர வேண்டும்.

எனக்கும் என் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும். குழந்தைகள் தொடர்ந்து படிக்கவும், நான்தொழில் செய்யவும் உதவ வேண்டும் என்றார்.

உதவி இல்லை: ஜெ

இதற்கிடையே வீரப்பனின் குடும்பத்தினருக்கு எந்த இழப்பீடும் வழங்கப்படாது என முதல்வர் ஜெயலலிதாதிட்டவட்டமாக அறிவித்துவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+