ஜெயலட்சுமியின் தந்தையிடம் சிபிஐ விசாரணை
மதுரை:
ஜெயலட்சுமியின் தந்தை அழகிரிசாமியிடம் சிபிஐ அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.
ஜெயலட்சுமியிடம் கடந்த 13ம் தேதி முதல் தொடர்ந்து 8 நாட்களாக சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணைமேற்கொண்டனர். மதுரை ரயில் நிலையத்தில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சுமார் 65 மணி நேரம் நடந்த விசாரணையில் 500க்கும்அதிகமான கேள்விகளுக்கு ஜெயலட்சுமி கூறிய பதில்கள் அனைத்தும் வீடியோவிலும், எழுத்து வடிவிலும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஜெயலட்சுமி கொடுத்த தகவல்களை, கிராஸ் செக் செய்து அவரிடம் துருவித் துருவி விசாரணை நடந்தது. இந்நிலையில் அவரிடம் முதல்கட்ட விசாரணையை முடித்துக் கொண்ட சிபிஐ இன்று ஜெயலட்சுமியின் தந்தைஅழகிரிசாமியிடம் விசாரணை தொடங்கியுள்ளது.
ஜெயலட்சுமியுடனான விவகாரத்தில் தனது மனைவி, ஜெயலட்சுமியின் குழந்தைகளை இன்ஸ்பெக்டர்இளங்கோவன் தலைமையிலான போலீஸார் கடத்திச் சென்றதுதொடர்பாக மாரநேரி காவல் நிலையத்தில்அழகிரிசாமி புகார் கொடுத்துள்ளார்.
மேலும் ஜெயலட்சுமியைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்துக்கு தந்தி கொடுத்தஅழகிரிசாமி, மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ஹேபியஸ் கார்பஸ் மனுவையும் தாக்கல் செய்திருந்தார்.
இதையடுத்து தான் ஜெயலட்சுமி விவகாரமே வெளியில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணை குறித்து சிபிஐ கூடுதல் எஸ்.பி. சிவாஜி நிருபர்களிடம் கூறுகையில், ஜெயலட்சுமியிடம் கடந்த 8 நாட்கள் விசாரணைநடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இன்னும் நிறைய விசாரிக்க வேண்டி இருப்பதால் மற்றபடி இதில் மேற்கொண்டு எதுவும்சொல்ல முடியாது என்றார்.
தேவைப்பட்டால் மீண்டும் ஜெயலட்சுமியை அழைத்து விசாரிப்போம் என்று சிபிஐ கூறியிருப்பதாக அவரது வழக்கறிஞர் அழகர்சாமிதெரிவித்தார்.
-
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்











Click it and Unblock the Notifications