கல்பாக்கத்தில் பிரதமர்: சென்னையில் ஜெ வரவேற்பு
சென்னை:
பிரதமராப் பொறுப்பேற்ற பின் மன்மோகன் சிங் இன்று முதன்முறையாக சென்னை வந்தார்.
காலை 10.45 மணிக்கு சிறப்பு விமானத்தில் சென்னை வந்த அவரை விமான நிலையத்தில் ஆளுநர் ராம்மோகன் ராவ், முதல்வர்ஜெயலலிதா, மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், தயாநிதி மாறன், அன்புமணி, ஆர்.வேலு, இளங்கோவன், பாண்டிச்சேரி முதல்வர்ரங்கசாமி,
திமுக பொதுச் செயலாளர் அன்பழகன், ஆற்காடு வீராசாமி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ,காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஜி.கே. வாசன், மாநில அமைச்சர்கள் பன்னீர்செல்வம், பொன்னையன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
இதையடுத்து ஹெலிகாப்டர் மூலம் மன்மோகன் சிங் கல்பாக்கம் புறப்பட்டுச் சென்றார். தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சுமார் 20நிமிட நேரம் தாமதமாக ஹெலிகாப்டர் புறப்பட்டுச் சென்றது.
அங்கு அணு சக்தித் துறையின் பொன் விழாவைத் தொடங்கி வைத்த சிங், 500 மெகாவாட் திறன் கொண்ட அதி வேக மின் உலைகளுக்குஅடிக்கல் நாட்டினார். ரூ. 3,492 கோடி செலவில் இந்தப் புதிய அதி வேக அணு உலைகள் தயாரிக்கப்படவுள்ளன. 2010ம் ஆண்டு இந்ததிட்டம் முடிவடையும்.
பின்னர் மரக் கன்றையும் மன்மோகன் சிங் நட்டார். இந் நிகழ்ச்சியில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் தயாநிதி மாறன், இந்திய அணுசக்திக் கழக தலைவர் அனில் ககோத்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கல்பாக்கம் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு சென்னை திரும்பும் பிரதமர், ஆளுநர் மாளிகையில் ஓய்வெடுப்பார், அப்போது அங்குகாங்கிரஸ் கட்சியினர் மற்றும் முக்கியஸ்தர்களை சந்தித்து மன்மோகன் சிங் பேசவுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவும் மன்மோகன் சிங்கை ஆளுநர் மாளிகையில் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிகிறது.
இதற்கிடையே பிரதமரின் முந்தைய திட்டப்பட்ட கோபாலபுரம் சென்று திமுக தலைவர் கருணாநிதியை அவரது வீட்டில் சந்திப்பதாகஇருந்தது. ஆனால், அவர் கொடைக்கானலில் தங்கி கண்ணம்மா படத்துக்கு வசனம் எழுதி வருவதால், இருவரின் சந்திப்பும்கைவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொடைக்கானலில் இருந்தபடியே மன்மோகன் சிங்குடன் கருணாநிதி தொலைபேசியில் பேசியுள்ளார்.
பிரதமரின் வருகையையொட்டி சென்னை நகரில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications