பன்னாரி to
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வீரப்பன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பன்னாரி மாரியம்மன் கோவிலுக்குச் சென்று மொட்டை போட்டுக் கொண்ட தமிழகஅதிரடிப்படைத் தலைவர் விஜயக்குமார் தனது அடுத்த நேர்த்திக் கடனாக, பன்னாரி மாரியம்மன் கோவிலிலிருந்து சென்னை நங்கநல்லூர்அனுமார் கோவிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளவுள்ளார்.
வீரப்பனையும், அவனது கும்பலையும் வீழ்த்திய பின்னர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பன்னா மாயம்மன்கோவிலுக்குச் சென்று மொட்டை போட்டார் விஜயக்குமார்.
இதைத் தொடர்ந்து தற்போது இன்னொரு நேர்த்திக் கடனையும் அவர் செலுத்தவுள்ளார். பன்னாரி மாயம்மன் கோவிலிலிருந்து வரும் 28ம்தேதி பாதயாத்திரை கிளம்பும் அவர், சென்னை வைர நடக்கிறார்.
சென்னை நங்கநல்லூரில் உள்ள அனுமார் கோவிலுக்கு பாதயாத்திரையாக வரும் அவர் தனது நேர்த்திக் கடனை செலுத்துவார்.












Click it and Unblock the Notifications