வீரப்பன்: விசாரணை கமிஷன் அமைக்க கோரிக்கை
விழுப்புரம்:
வீரப்பன் கொலை தொடர்பான உண்மைகளை வெளிக்கொணர உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கமிஷன் அமைக்க வேண்டும் என்று மக்கள் உரிமைக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக இக் கூட்டமைப்பின் தலைவர் பேராசிரியர் கல்யாணி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வீரப்பனும் அவரது கூட்டாளிகளும் அதிரடிப்படையால் சுட்டுக்கொல்லப்பட்டதாக வந்த தகவல்களில் பல்வேறுசந்தேகங்கள் உள்ளன.
இது தொடர்பாக அதிரடிப்படை தலைவர் விஜயகுமார் முதலில் அளித்த பேட்டிக்கும், பின்னர் அளித்த பேட்டிக்கும்இடையே முரண்பாடுகள் உள்ளன. முதலில் உளவுத்துறை தகவலின் பேரிலேயே வீரப்பன் சுற்றி வளைத்து சுட்டுக்கொல்லப்பட்டதாக விஜயகுமார் தெரிவித்தார்.
பின்னர், வீரப்பன் குழுவில் ஒரு உளவாளியை சேர வைத்து பொறி வைத்து வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவிஜயகுமார் தெரிவித்தார். முதலில் வீரப்பனின் வேனை ஓட்டிய டிரைவர் தப்பிவிட்டதாகக் கூறினார். பின்னர்அந்த வேனை ஓட்டியவர் தங்களால் அனுப்பி வைக்கப்பட்ட அதிரடிப்படை வீரர்தான் என்று கூறினார்.
வீரப்பன் தலையிலுள்ள காயங்களைப் பார்க்கும்போது அதிரடிப்படையினர் மிக அருகிலிருந்து சுட்டது போல்தெரிகிறது.
பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் வீரப்பன் உள்ளிட்டோரின் சடலங்களை அவர்களது உறவினர்களிடம்காவல்துறை ஒப்படைக்கப்படவில்லை. மேலும் அவர்களின் குல வழக்கப்படி சடலத்தைக் குளிப்பாட்டி சடங்குகள்செய்யவும் அனுமதிக்கவில்லை.
இதனால் வீரப்பன் குழுவினர் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்ட தடயங்களை மறைக்கவே காவல்துறையினர்இவ்வாறு நடந்து கொண்டதாக சந்தேகம் வந்துள்ளது.
எனவே இது குறித்து விசாரிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் கமிஷன் அமைக்க வேண்டும்.
தேசிய மனித உரிமை ஆணையத்திடம் நீதிபதி சதாசிவம் கமிஷன் சமர்ப்பித்த அறிக்கை வெளியிடப்பட்டால்அதிரடிப்படை செய்த கொலைகள், பாலியல் கொடுமைகள் பற்றிய உண்மைகள் வெளியுலகுக்குத் தெரியவரும்.இந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு அப்பாவிகளைத் துன்புறுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications