வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டி: முத்துலட்சுமி
மேட்டூர்:
வாய்ப்பு கிடைத்தால் தேர்தலில் போட்டியிடுவேன் என்று சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமிகூறினார்.
பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:
வீரப்பன் என் புருஷனாக இருப்பினும், அவர் செய்தது தவறு தான். அதற்கான தண்டனை அவருக்கு கிடைத்துவிட்டது. அதை நான் நியாயப்படுத்தவோ, பெரிதுபடுத்தவோ விரும்பவில்லை. அவரது உடலைதோண்டியெடுத்து மறு பரிசோதனை செய்வதிலும் எனக்கு விருப்பமில்லை.
வீரப்பனை பிடிக்க வேண்டும் என்பதற்காக நான் உட்பட எனது உறவினர்களை அதிரடிப்படையினர் அடித்து,உதைத்து சித்ரவதைக்கு ஆளாக்கினர்.
என் மீதும், என்னுடைய உறவினர்கள் மீதும் போடப்பட்டுள்ள எல்லா வழக்குகளையும் தமிழகம் மற்றும் கர்நாடகஅரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும்.
கடந்த 10 ஆண்டுகளாக முடக்கி வைக்கப்பட்டுள்ள என்னுடைய உடமைகளையும், சொத்துக்களையும் என்னிடம்திரும்ப ஒப்படைக்க வேண்டும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதால், நான் இனிஉழைத்து பிழைக்க முடியாத நிலையில் இருக்கிறேன். எனவே அரசு தான் எனக்கு எல்லா உதவிகளையும் செய்துதரவேண்டும்.
என் இரு மகள்கள் படிப்பு செலவையும் அரசு ஏற்று மனிதாபிமான அடிப்படையில் உதவ வேண்டும்.
என்னைப்போல் முதல்வர் ஜெயலலிதாவும் ஒரு பெண் தான். அவரும் பல்வேறு இன்னல்களை, பிரச்னைகளைசந்தித்திருக்கிறார். இதனால், என்னுடைய உணர்வுகளை அவர் புரிந்து கொண்டு, உதவி செய்வார் என்ற நம்பிக்கைஎனக்கு உள்ளது.
இப்போதும் போலீஸ் எங்களை நிழல்போல பின் தொடர்கிறது. மற்றவர்களை போல நாங்களும் நிம்மதியாக வாழவிரும்புகிறோம்.
வாய்ப்பு கொடுத்தால் வரும் தேர்தலில் போட்டியிடுவேன். எந்த கட்சியின் சார்பாக போட்டியிடுவேன் என்பதைஇப்போது கூற முடியாது என்று கூறினார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications