வீரப்பனை கொன்றது எப்படி? வெள்ளத்துரை பரபரப்பு பேட்டி
சென்னை:
வீரப்பனை சுட்டுக் கொன்ற சம்பவத்தை அதற்கான பின்னணி முயற்சிகளுடன் பத்திரிக்கையாளர்களிடம்விவரித்தார் சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்துரை.
காவல்துறையில் என்கெளண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்றழைக்கப்படும் வெள்ளத்துரை, வீரப்பன் வேட்டைப்படலத்தின் முக்கிய ஹீரோ. கடந்த 20 ஆண்டுகளாக தமிழக, கர்நாடக போலீசுக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தவீரப்பனை போட்டுத் தள்ளிய அனுபவத்தை வெள்ளத்துரை விவரிக்கிறார். அவரது பேட்டி:
கடந்த செப்டம்பர் மாதம் கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமார், வீரப்பன் வேட்டைக்கு உன்னை பயன்படுத்தப்போகிறேன். உடனே புறப்பட்டு வா என்று கூறினார். என் மனைவியிடம் கூட இதைப் பற்றி சொல்லாமல்,மகிழ்ச்சியுடன் கிளம்பினேன்.
வீரப்பன் வேட்டைக்கு என்னை பயன்படுத்த போகிற விஷயம், விஜயகுமாருக்கும், எஸ்.பி. செந்தாமரைக்கண்ணனுக்கும் மட்டுமே தெரியும். எனக்கு ஏ.கே. 47, எஸ்.எல்.ஆர். உள்பட நவீன துப்பாக்கிகளை கூட எனக்குஉபயோகிக்கத் தெரியும். ஆனால் வீரப்பன் வேட்டைக்கு எம்.பி. 5 ரக துப்பாக்கியில் பயிற்சி கொடுத்தார்கள். அந்ததுப்பாக்கி 30 ரவுண்டு சுடக் கூடியது.
4 நாள் பயிற்சிக்குப் பின் சென்னை வந்துவிட்டேன். 2 நாள் கழித்து விஜயக்குமார் மீண்டும் அழைத்தார்.
அப்போது அவர், நீ தனி ஆளாக வீரப்பன் கூட்டத்தில் சேர வேண்டும் என்றார். எனக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியாகஇருந்தாலும், இன்னொரு பக்கம் தைரியம் தானாக வந்தது. இரண்டு வேடங்களில் எனக்கு பயிற்சிகொடுக்கப்பட்டது.
ஒன்று இலங்கைத் தமிழர் வேடம். மற்றொன்று ரெளடி வேடம். இலங்கை தமிழிலும் பேச பயிற்சி பெற்றேன். 4நாட்கள் பயிற்சிக்கு பின் சென்னை வந்து விட்டு, 2 நாட்கள் கழித்து மீண்டும் சென்றேன்.
வீரப்பன் தனது கூட்டத்திற்கு ஆள் சேர்க்கிறான், நீங்கள் ஒரு கொலை கைதி போல வீரப்பன் கூட்டத்தில் சேரவேண்டும் என்று விஜயக்குமார் கூறினார். செப்டம்பர் கடைசியில் ஒரு நாள் இரவு 10 மணிக்கு உளவாளி ஒருவன்என்னை அழைத்துச் சென்றான்.
10 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றோம். அதிகாலை 4 மணியளவில் வீரப்பனுக்காக காத்திருந்தோம்.வீரப்பனுக்கு கண் பார்வை குறைவு என்று எங்களுக்கு தகவல் வந்து இருந்தது.
இதனால் இருட்டில் வீரப்பனை பார்த்தவுடன் சுட்டுத் தள்ள தயாராக சென்றிருந்தேன். காலை 6 மணியான பின்னும்வீரப்பன் வரவில்லை. உடனே முகாமுக்குத் திரும்பி, சென்னைக்கு வந்து விட்டேன்.
அக்டோபர் 13ம் தேதி மீண்டும் அழைத்தார்கள். இந்த முறை புதிய வியூகம். வீரப்பனை கண் அறுவைசிகிச்சைக்காக ஒரு ஆம்புலன்ஸ் வேனில் அழைத்து வரவேண்டும் என்று கூறினார்கள். அதிரடிப்படை வீரர்சரவணன் ஆம்புலன்ஸ் வேனை ஓட்டுவார் என்று கூறப்பட்டது.
18ம் தேதி இரவு வீரப்பன் வேட்டைக்கு நாள் குறிக்கப்பட்டது. ஆம்புலன்ஸ் வேன் கோவையில் ஒரு மெக்கானிக்ஷெட்டில் வைத்து தயார்படுத்தப்பட்டது. 18-ம் தேதி காலையில் கோவை சென்று நானும், சரவணனும் வேனைஎடுத்து வந்தோம். வீரப்பனிடம் எப்படி பேச வேண்டும் என்பதை விஜயக்குமார் சொல்லிக் கொடுத்தார்.
இரவு 10 மணி. பாப்பாரப்பட்டியின் ஒதுக்குப்புறத்தில் ஆம்புலன்ஸ் வேனை எடுத்துச் சென்றோம்.
அங்கு வீரப்பனின் ஆள் பழனி என்பவர் 2 பேருடன் காத்திருந்தார். என்னிடம் கொடுக்கப்பட்டிருந்த ஒருஅடையாள அட்டையை காட்டினேன்.
அதன்பின்பு இருட்டிலிருந்து சந்திரகவுடா, சேத்துமணி வந்தனர். வேனில் ஏறிப் பார்த்துவிட்டு, மீண்டும்இருட்டுக்குள் சென்றனர். சிறிது நேரத்தில் சேத்துக்குளி கோவிந்தன், வீரப்பனுடன் வந்தார்கள். அவர்களுக்குவணக்கம் சொன்னேன்.
வீரப்பனுக்கு இடது கண் சுத்தமாகத் தெரியவில்லை. வலது கண் கூட மங்கலாகத்தான் தெரியும் போலிருக்கிறது.அவன் வேனில் ஏறியபோது, நான் போட்ட வணக்கத்துக்கு மட்டும் பதில் வணக்கம் போட்டான். என்னைதிரும்பிக்கூட பார்க்கவில்லை.
வீரப்பன் எங்களை சோதனை போடவில்லை. நான் 2 துப்பாக்கிகள், 3 கையெறி குண்டுகள் ஆகியவற்றை ஒருபெல்ட்டில் சுற்றி மார்பில் கட்டி இருந்தேன்.
ஒருவேளை வீரப்பன் என்னை சந்தேகப்பட்டால், உடனே அவனை சுட்டுத்தள்ள உத்தரவு போட்டிருந்தனர்.ஆனால் அப்படி ஏதும் நடக்கவில்லை.
வேனில் வரும்போது நடுவழியில் வீரப்பன் எதுவும் பேசவில்லை. நாங்களும் எதுவும் பேசவில்லை. பின்புநாங்கள் குறித்து வைத்திருந்த இடத்திற்கு வந்ததும், வண்டியை விட்டு குதித்தோம். ஒரு குண்டை வேனை நோக்கிவீசி, முதலில் வீரப்பனுக்கு அதிர்ச்சி கொடுத்தோம்.
அத்துடன் எங்கள் வேலை முடிந்தது. அதன்பின்பு நடந்ததை விஜயக்குமார் வாயிலாக நீங்கள் அறிவீர்கள்.
வீரப்பனுக்கு சரண் அடைய வாய்ப்பு கொடுக்கப்பட்டது. வீரப்பன் கண்பார்வை இல்லாமல் செயல் இழந்துஇருந்தான். சேத்துக்குளி கோவிந்தன்தான் சரண் அடையாமல் போலீஸ் மீது சுட்டிருக்க வேண்டும் என்று நான்நினைக்கிறேன்.
இந்த வேட்டைக்காக முதல்வர் ஜெயலலிதாவிடம் விருது பெறப் போவதை பெரும்பாக்கியமாக கருதுகிறேன்என்று கூறினார்.
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications