இட்லிக் கடை திறக்கும் சுப்ரமணியம் சுவாமி!
சென்னை:
மதுரையில் மிகப் பிரபலமான முருகன் இட்லிக் கடையின் சென்னை கிளைகளை ஜனதா கட்சித்தலைவர் சுப்பிரமணியம் சுவாமி திறந்து வைக்கவுள்ளார்.
இந் நிகழ்ச்சியில்முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழக ஜனதாக் கட்சித் தலைவருமானசந்திரலேகாவும் கலந்து கொள்கிறார்.
மதுரையைச் சேர்ந்த முருகன் இட்லிக் கடை, இட்லி, தோசைகளுக்குப் பிரபலமானது. சிலஆண்டுகளுக்கு முன் இதன் உரிமையாளர்களின் வாரிசுகளுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டபோதுமுருகன் இட்லிக் கடை மூடப்பட்டது.
அப்போது ஒரு தரப்புக்கு அதிமுகவினர் சிலரும் இன்னொரு தரப்புக்கு மதுரை எம்.பியாக இருந்தசுவாமியும் ஆதரவாகக் களமிறங்கினர். இதனால் அவ்வப்போது இந்த இட்லிக் கடையை வைத்துமதுரையில் அரசியல் மோதல் நடந்து வந்தது.
இந் நிலையில் போலீஸ் தடையையும் மீறி இந்தக் கடையை திறந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினாசுப்ரமணிய சுவாமி.
இப்போது பிரச்சனைகள் ஓய்ந்துவிட்ட நிலையில் சென்னையில் 2 இடங்களில் கிளைஅமைத்துள்ளனர் முருகன் இட்லிக் கடை நிறுவனத்தினர், தங்களது 3வது கிளையைதிருவல்லிக்கேணியில் இன்று திறக்கிறார்கள்.
இந்தக் கடையை சுப்ரமணிய சுவாமி திறந்து வைக்கிறார். அகில இந்திய அளவில் அரசியல் நடத்தி,வெளிநாட்டுத் தலைவர்கள் பலருடன் நெருக்கமான நட்பு வைத்திருந்த சுப்ரமணியம் சுவாமிதற்போது இட்லிக் கடை திறப்பு விழாவில் பங்கேற்கும் அளவுக்கு ரொம்பவே ப்ரீயாக இருப்பதுகுறிப்பிடத்தக்கது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications