3 நாள் சித்திரவதைக்கு பின் வீரப்பன் கொலை?
தர்மபுரி:
| வீரப்பனை பொறி வைத்துப் பிடித்தோம், ஆம்புலன்சில் வந்தபோது கொன்றோம் என்று அதிரடிப்படை கூறிக்கொண்டிருக்க, இது குறித்து விசாரிக்கச் சென்றுள்ள உண்மை அறியும் குழுவுக்கு பல திகீர் விவரங்கள் கிடைத்துவருகின்றன.
தமிழக அதிரடிப் படையினரிடம் ஏற்கனவே வீரப்பன் சிக்கிவிட்டதாகவும், அவனை 3 நாட்கள்தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து அடித்து, |
இந்த 19 பேர் கொண்ட குழுவில் பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் இடம்பெற்றுள்ளனர்.
வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்ட இடம், பாடி, பாப்பாரப்பட்டி கிராம மக்கள், வீரப்பன் மனைவி,தர்மபுரி அரசு மருத்துவமனை டாக்டர்கள் என பலரிடமும் இந்தக் குழுவினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
அதிரடிப்படை அதிகாரிகளை சந்திக்க சத்தியமங்கலம் சென்ற இவர்களை அதிகாரிகள் சந்துக்கமறுத்து விட்டனர். இதனால் அதிரடிப்படையினரின் கருத்தை இவர்களால் அறிய முடியவில்லை.
| அதே போல வீரப்பன் கும்பல் சுட்டுக் கொல்லப்பட்ட ஆம்புன்ஸையும் பார்வையிட இந்தக்குழுவுக்கு அனுமதி தரப்படவில்லை.
இந் நிலையில் இதுவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில் 3 கோணங்களில் எங்களதுசந்தேகங்களை நாங்கள் தெளிவுபடுத்தி வருகிறோம் என்று குழுவின் தலைவரான சேஷய்யாதெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டது தற்செயலாக நடந்தது போலத்தெரியவில்லை. அவனது சாவில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. |
|
இது தவிர 3 நாட்களுக்கு முன்பே வீரப்பனை அதிரடிப்படையினர் பிடித்து விட்டதாகவும், தங்களதுகாவலில் வைத்து அவனை சித்திரவதை செய்ததாகவும், அதன் பின்பே வீரப்பனை சுட்டுக்கொன்றதாகவும் எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்து விரிவாக நாங்கள் விசாரித்துவருகிறோம்.
| வீரப்பன் பிணத்தை மீண்டும் பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் நாங்கள்வலியுறுத்துவோம். விசாரணை தொடர்பான விரிவான விவரங்கள் இன்றுபத்திரிக்கையாளர்களிடம் தெரிவிக்கப்படும் என்றார் சேஷய்யா.
இந்தக் குழுவினர் சென்ற இடங்களில் எல்லாம் மிக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.உளவுப் பிரிவினரும், |
அதிமுகவினர் தகராறு:
இந்தக் குழுவினரை பல இடங்களில் அதிமுகவினர் வழிமறித்தும் தகராறு செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இவர்களுக்கு ஆதரவாக மலைப் பகுதி மக்கள் பேச முன் வந்தபோது அவர்களையும் அதிமுகவினர் தடுத்தனர்.இதனால் பல இடங்களில் பதற்றம் ஏற்பட்டது.
எஸ்.பி. பேட்டி:
இதற்கிடையே அதிரடிப்படை எஸ்.பி. செந்தாமரைக்கண்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,
காட்டில் வீரப்பன் ஆங்காங்கே பணத்தை புதைத்து வைத்திருப்பது உண்மைதான். அரசு அனுமதி கொடுத்தால்அந்தப் பணத்தை தேடி எடுத்து வர அதிரடிப்படை வீரர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று கூறினார்.















Click it and Unblock the Notifications