வீரப்பன்: மாநகராட்சியில் திமுக-அதிமுக அடிதடி

Subscribe to Oneindia Tamil

சேலம்:

வீரப்பன் விவகாரத்தை வைத்து சேலம் மாநகராட்சிக் கூட்டத்தில் திமுக உறுப்பினர்களும், அதிமுகஉறுப்பினர்களும் மோதிக் கொண்டனர். சட்டைகளைப் பிடித்து இழுத்தும், ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டும்,கைகலப்பில் ஈடுபட்டனர்.

சேலம் மாநகராட்சியின் அவசர கூட்டம் இன்று நடந்தது. இதற்கு மேயர் சுரேஷ்குமார் தலைமை வகித்தார்.கூட்டத்தில் அதிமுக தலைவர் செல்வராஜ் எழுந்து, சந்தன வீரப்பன் சுட்டு கொல்லப்பட்டது தொடர்பாக முத்லவர்ஜெயலலிதாவைப் பாராட்டி தீர்மானம் வாசித்தார்.

அப்போது திமுக மண்டல தலைவர் நடேசன் குறுக்கிட்டு, வீரப்பன் பிரச்சனை இந்த அவைக்கு கொஞ்சமும்சம்பந்தம் இல்லாதது. அப்படியிருக்க இங்கே எதற்கு பாராட்டுத் தீர்மானம் என்று கேட்டு எதிர்ப்பு தெரிவித்தார்.

இதையடுத்து அதிமுக, திமுக கவுன்சிலர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வார்த்தைகள் முற்றி ஒருவரைஒருவர் சட்டையைப் பிடித்து இழுத்து தள்ளினர். சிலருக்கு அடியும் விழுந்தது. இதனால் அவையில் பெரும்குழப்பம் நிலவியது.

இந் நிலையில் செல்வராஜ் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார். பின்னர் துணை மேயர் சவுண்டப்பன்செல்வராஜை கூட்ட அரங்கிற்கு அழைத்து வந்தார்.

உறுப்பினர்களை இருக்கையில் சென்று அமரும்படி மேயர் கேட்டு கொண்டார். இதையடுத்து அனைவரும்இருக்கையில் உட்கார்ந்தார்கள். ஆனால் அடுத்த சில நிமிடத்தில் செல்வராஜ் மீண்டும் வீரப்பன் தீர்மானத்தைவாசிக்க தொடங்கினார்.

இதையடுத்து திமுக உறுப்பினர்கள் மீண்டும் எதிர்ப்பு தெரிவிக்கவே, மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போதுதிமுக உறுப்பினர் முருகன், செல்வராஜ் முன் இருந்த மைக்கை பிடுங்கினார். இதனையடுத்து அதிமுக மண்டலதலைவர் சண்முகம், முருகன் மீது பாய்ந்தார்.

இதனையடுத்து திமுக, அதிமுக உறுப்பினர்கள் ஒருவர் மீது ஒருவர் தாக்கத் தொடங்கினர். அடிதடி தீவிரமாகவேகூட்டத்தை 10 நிமிடம் தள்ளி வைத்தார் மேயர். இதைத் தொடர்ந்து தனது அறையில் உறுப்பினர்களை அழைத்துபேச்சுவார்த்தை நடத்தினார் மேயர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் மீண்டும் நடந்தது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+