ஹஜ்: நெரிசலில் இறந்தோர் குடும்பத்தினருக்கு அழைப்பு
டெல்லி:
கடந்த வருடம் ஹஜ் நெரிசலில் இறந்த 12 இந்தியர்களின் உறவினர்கள் 36 பேர் இலவசமாக ஹஜ் யாத்திரைசெல்ல செளதி அரசு அழைப்பு விடுத்துள்ளது.
அண்மையில் இந்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் அஹமது செளதி அரேபியாவில் சுற்றுப் பயணம்மேற்கொண்டார். அப்போது செளதி அரசர் பஹ்த் மற்றும் ஹஜ் துறை அமைச்சர் இயாத் பின் அமீன் மதானிஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.
இதனையடுத்து கூடுதலாக 10,000 இந்தியர்கள் ஹஜ் யாத்திரை செல்ல செளதி அரசு அனுமதி வழங்கியுள்ளது.மேலும் கடந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது ஏற்பட்ட நெரிசலில் உயிரிழந்த 12 இந்தியர்களின் நெருங்கியஉறவினர்கள் 36 பேருக்கு (தலா 3 பேர் வீதம்) செளதி அரசின் செலவில் ஹஜ் யாத்திரை செல்ல அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் பயணம் மற்றும் தங்குவதற்கான செலவை செளதி அரசு ஏற்கிறது.
இந்தியாவில் இருந்து இந்த ஆண்டு 82,000 பேர் மத்திய ஹஜ் கமிட்டி மூலமாகவும், 45,000 பேர் தனியாகவும் ஹஜ்யாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ஹஜ் பயணிகளுக்கு வசதியாக பாட்னா, ஒளரங்கபாத், கெளகாத்தி ஆகியஇடங்களில் இருந்தும் செளதிக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications