முன்னாள் கமிஷனர் முத்துக்கருப்பனுக்கு 7 நாள் சிறை
சென்னை:
சென்னை மாநகர முன்னாள் போலீஸ் கமிஷ்னர் முத்துக்கருப்பனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் 7 நாள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
கடந்த 2001ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில், சென்னை எழும்பூர் (தனி) தொகுதி வாக்குப் பதிவின்போதுபெரும் வன்முறை மூண்டது. இதையடுத்து அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட ஜான் பாண்டியன் கொடுத்தபுகாரின் பேரில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பரிதி இளம்வழுதி கைது செய்யப்பட்டார்.
பின்னர் ஜாமீன் கோரி பரிதி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்தார். மனுவை விசாரித்தசெஷன்ஸ் நீதிமன்றம் பரிதியை ஜாமீனில் விடுதலை செய்ய உத்தரவிட்டது.
இந்த ஜாமீனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சென்னை நகர காவல்துறை சார்பில் மேல் முறையீடுசெய்யப்பட்டது. அந்த மனுவில் பரிதி இளம்வழுதி போலீஸ் காவலில் இருப்பதாக காவல்துறை தெரிவித்திருந்தது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பரிதிக்குக் கொடுக்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்தது.
இந்தத் தீர்ப்பையடுத்து கமிஷ்னர் முத்துக்கருப்பன், இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார் பரிதி இளம்வழுதி.
அதில், நான் போலீஸ் காவலில் நான் இருப்பதாக பொய்யான தகவலை முத்துக்கருப்பனும், ராஜேந்திரனும் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். எனவே அவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்புக்காக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், சிங்காரவேலு ஆகியோர் இன்று தீர்ப்பளித்தனர்.
அதில், நீதிமன்றத்திற்குப் பொய்யான தகவலை பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் தந்துள்ளது பெரும்வருத்தம் தருகிறது. இதற்காக இருவருக்கும் 7 நாள் சாதாரண சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்த தண்டனையை எதிர்த்து இருவரும் மேல் முறையீடு செய்யலாம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications