ராம்மோகன் மிரட்டப்பட்டார்: அதிமுக புகார்
டெல்லி:
ஆளுநர் பதவியிலிருந்து விலகுமாறு ராம்மோகன் ராவை மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் மிரட்டினார் என்று அதிமுகஎம்.பியான பி.ஜி.நாராயணன் கூறினார்.
ஆங்கில பத்திரிக்கை ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
ராம்மோகன் ராவை ஆளுநர் பதவியில் இருந்து விலகும்படியும், ஆளுநர் மாளிகையை காலி செய்யும்படியும் சிவராஜ் பாட்டீல்மிரட்டினார். ராம்மோகன் ராவுக்கு தொடர்ந்து இடைஞ்சல்கள் கொடுக்கப்பட்டன.
2001-ம் ஆண்டில் பாத்திமா பீவி ஆளுநராக இருந்தபோது என்ன இடையூறுகளை சந்தித்தாரோ அதே போல இப்போது ராம்மோகன்ராவும் சந்தித்தார். ராம்மோகன் ராவை டெல்லிக்கு சிவராஜ் பாட்டீல் வரவழைத்து, அவரை சென்னையை விட்டு விரட்டி விட்டார்.
ராமமோகன் ராவை வீட்டுக்கு அனுப்புவதுதான் மத்திய அரசின் திட்டம். திமுகவிடம் இருந்து வந்த நிர்பந்தம் காரணமாகவே மத்திய அரசுஇதைச் செய்துள்ளது.
மறைந்த சென்னாரெட்டி போன்ற ஒருவரை ஆளுநராக்க திமுக விரும்புகிறது. கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போதுஅவருக்கு சென்னாரெட்டி எத்தனை தொல்லைகள் கொடுத்தார் என்பது அனைவருக்கும் தெரியும்.
கூட்டணி கட்சியின் நிர்பந்தத்துக்கு மத்திய அரசு பணிவது ஏன் என்பது தெரியவில்லை. இது கூட்டாட்சி தத்துவத்தையும், மத்திய- -மாநிலஉறவையும் பாதிக்கும் என்று கூறினார்.
டெல்லிக்கு வரவழைக்கப்பட்ட ராம்மோகன் ராவிடம் தமிழக அரசு குறித்து அறிக்கைகளைக் கேட்ட பாட்டீல், பின்னர் அவரிடம்ராஜினாமா கடிதத்தையும் வாங்கிக் கொண்டு அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. இதன் பின்னரே, ஜனாதிபதிக்கு நேரடியாக தனதுராஜினாமாவை அனுப்பினார் ராவ்.
பஞ்சாப் ஆளுநரும் ராஜினாமா:
இதற்கிடையே கடந்த பா.ஜ.க. நியமிக்கப்பட்ட பஞ்சாப் மாநில ஆளுநர் ஓ. பி. வர்மாவும் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
-
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா!












Click it and Unblock the Notifications