20 சதவீத ஈரப்பத நெல் கொள்முதல்: ஜெ. உத்தரவு
சென்னை:
தமிழக விவசாயிகளுக்கு பயன் அளிக்கும் வகையில் 20 சதவீத ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்ய முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
ஜெயலலிதா உத்தரவின் பேரில் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் கடந்த 1ம் தேதி முதல்விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்து வருகிறது. மத்திய அரசின் தர நிர்ணயத்தின்படி 17 சதவீதம் வரைஈரப்பதம் உள்ள நெல் மட்டும்தான் கொள்முதல் செய்யப்படுகிறது.
வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டதால், குறுவை நெல் அறுவடை செய்யும் விவசாயிகள் 17 சதவீதத்திற்குமேல் ஈரப்பதம் உள்ள நெல்லையும் வாங்க உத்தரவிடும்படி ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர்.
இந்த வேண்டுகோளினை ஏற்று நெல் கொள்முதலுக்கான ஈரப்பதத்தினை 17 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகஉயர்த்தி கொள்முதல் செய்திட மத்திய அரசிற்கு ஜெயலலிதா பரிந்துரை செய்தார். இந்தப் பரிந்துரையை ஏற்று 20சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை அதற்குண்டான பண பிடித்தத்துடன் கொள்முதல் செய்ய மத்திய அரசுஅனுமதி அளித்துள்ளது.
இதன் மூலம் விவசாயிகள் 20 சதவிகிதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் நிலையங்களில் விற்பனைசெய்து பயன் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications