அதிரடிப்படையினருக்கு வீட்டு மனை ஏன்: ஜெ.
சென்னை:
எந்தத் தமிழ் நிலத்தை வீரப்பன் என்ற கொடுமைக்காரனிடமிருந்து மீட்க அதிரடிப்படையினர் போராடினார்களோ,அந்த தமிழகத்தில், ஒரு பகுதியை அவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்ற எண்ணத்தினால்தான் அவர்களுக்கு வீட்டுமனை பரிசாக வழங்கப்பட்டதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
அதிரடிப்படையினருக்கு 3 விதமான பரிசுகளை வழங்க என்ன காரணம் என்பதை ஜெயலலிதா பாராட்டுவிழாவில் விளக்கினார்.
வீரப்பனை வீழ்த்தியதன் மூலம் அதிரடிப்படையினருக்கு இன்று கை மேல் பலன் கிடைத்துள்ளது. இது சாதாரணபலன் அல்ல, தலைறைகள் நினைவு கூறப் போகிற பலன். எதிர்காலத்தில் உங்களது பேரப் பிள்ளைகள் என்னஅவார்டு கிடைத்தது தாத்தா என்று கேட்டால், இதோ அவார்டு கிடைத்தது என்று சொல்லி ஒரு பதக்கத்தை மட்டும்இவர்கள் காட்ட மாட்டார்கள்.
என்ன அவார்டு என்றா கேட்டாய், இன்றைக்கு நாம இருக்கிற இடமே என் வீரத்துக்குப் பரிசாக எங்களது முதல்வர்அம்மா கொடுத்தது என்று நீங்கள் கூறும் வண்ணம் வீட்டுமனையை பரிசாக வழங்கியுள்ளேன்.
வீரத்திற்குப் பரிசாக வீட்டு மனையா என்று சிலர் கேட்பார்கள். எந்த தமிழ் நிலத்தை வன்முறைக்காரர்களிடமிருந்துமீட்க நீங்கள் போராடினீர்களோ, அந்த நிலத்திலே ஒரு சிறு பகுதியை உங்களுக்கு பரிசாக அளிப்பதுதானேபொருத்தம்?
எந்தப் பதவியில் இருந்து கொண்டு நீங்கள் தீமையை அழிக்கப் போராடினீர்களோ, அந்தப் பதவிக்கு ஒரு படிமேலே உயர்த்தி உட்கார வைப்பதுதானே முறை? அதனால்தான் ஒரு படி பதவி உயர்வு வழங்கினேன்.
காட்டுப் பொருட்களை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு நாட்டுப் பொருளையும் தாரை வார்த்தார்கள் சிலர்.அந்தக் கூட்டுக் கொள்ளைக்கு முடிவு கட்டிய உங்களுக்கு தக்க பரிசு என்பது ரொக்கப் பரிசாகத்தானே இருக்கமுடியும். எனவேதான் இந்த மூன்று பரிசுகளையும் வழங்கியிருக்கிறேன் என்றார் ஜெயலலிதா.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்?












Click it and Unblock the Notifications