அரசு விழாவில் திமுகவுக்கு வசை: கருணாநிதி கண்டனம்
சென்னை:
அதிரடிப்படை விழாவில் திமுகவைத் தாக்கி முதல்வர் ஜெயலலிதா பேசியதற்கு திமுக தலைவர் கருணாநிதிகண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வீரப்பன் கொல்லப்பட்டதற்கு அதிரடிப்படையினரையும், அதன் தலைவரையும் தமிழக மக்கள் அனைவரும்பாராட்டியிருக்கிறார்கள். நானும் பாராட்டியிருக்கிறேன்.
அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டுள்ளது. அதுவும் வரவேற்கப்பட வேண்டிய ஒன்றுதான்.
ஆனால் அரசு விழா மக்கள் பணத்தில் நடத்தப்படுகிறது என்பதை மறந்து விட்டு, முதல்வர் திமுகவைவசைபாடியுள்ளார்.
எந்த அரசு விழாவாக இருந்தாலும் எதிர்க்கட்சிகளையும், திமுகவையும் தாக்குவதை ஜெயலலிதா வழக்கமாகக்கொண்டிருக்கின்றார்.
அதிரடிப் படையினரைப் பாராட்ட வேண்டிய நேரத்தில் இந்தப் பேச்சு தேவையா? அரசு அதிகாரிகளையெல்லாம்வைத்துக் கொண்டு எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டுவது தேவைதானா? குற்றச்சாட்டில் உண்மையிருக்கிறதா?
திமுக ஆட்சியில் வீரப்பனுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதுபோலவும், அதிமுகஆட்சியில்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டது போலவும் ஜெயலலிதா பேசியிருக்கிறார்.
இதற்கு முன்பு அதிமுக ஆட்சியில் இருந்தபோது தமிழக எல்லையில் மாத்திரம் வீரப்பனால் கொல்லப்பட்டவர்கள்63 பேர். பின்பு வந்த திமுக ஆட்சியில் 3 பேர் மட்டும்தான் வீரப்பன் குழுவினால் கொலை செய்யப்பட்டார்கள்.
1991-96 வரையில் ஜெயலலிதா ஆட்சியில் கைது செய்யப்பட்ட வீரப்பன் கூட்டாளிகளின் எண்ணிக்கை 121 பேர்.திமுக ஆட்சியில் கைது செய்யப்பட்டவர்கள் 135 பேர்.
இதிலிருந்தே திமுக ஆட்சியில் வீரப்பன் குழுவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இல்லை என்பதைதெரிந்து கொள்ள முடியும்.
காவல்துறையினர் அனைவரும் அரசுப்பணியாளர்கள். அவர்களிலே கூட திமுக ஆட்சியில் அதிரடிப்படைப்பிரிவிலே பணியாற்றியவர்களுக்கு முதல்-வர் தன் கையால் விருது வழங்காமல் உள்துறை செயலாளர் மூலமாகவழங்கப்பட்டதாகக் கூறினார்கள். அரசின் சார்பில் விருது வழங்கப்படும்போது இந்தப் பாகுபாடு தேவைதானா?
வீரப்பன் கதை முடிந்தது நிம்மதிதான் என்றாலும், அக் கதை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது எப்படி என்பதைவிளக்கிட முன் வராமல், இருப்பவர்களை உசுப்பிவிடும் விதமாக ஜெயலலிதா பேசிவது அவருக்கும் நல்லதல்ல.அவரிடம் பாராட்டும் பரிசும் பெற்று தோள் தட்டிக் கொள்பவர்களுக்கும் நல்லதல்ல என்று கூறியுள்ளார்.
-
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள்












Click it and Unblock the Notifications